பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 விந்தன் இலக்கியத் தடம் அதைக்கேட்ட எனக்கு 'நாமும் கடலில் மூழ்கிவிட்டால் என்ன? என்று தோன்றிற்று. (பக்கம் - 47) என்று கதையை முடிக்கிறார் விந்தன் அவர்கள். மனிதன் வாழும்போது சமுதாயம் அவனை வாழ வைக்காத நிலையை, மனத்தைத் தொடக்கூடிய வகையில் எழுதியுள்ள பான்மை விளங்குகிறது. நடை எளிய தமிழிலே, தெளிவான, உணர்ச்சிக் கொந்தளிப்பான முறையில் அவரது நடை அமைந்துள்ளது. கவிஞர்கள், தமிழறிஞர்கள் உயிரோடு இருக்கும் போது வறுமையில் இருக்கின்றார்கள்; அவர்கள் மறைந்த பின்பு அவர்கள் சந்ததியர்களைப் பற்றி எழுதிப் பத்திரிகையாளர்கள் பணம் சேர்ப்பதை மிகச் சுவையாக எழுதியுள்ளார். திரு. சதானந்தம் அவரைப் பற்றிக் குறிப்பிடுகையில், எத்தனையோ பத்திரிகாசிரியர்கள் அவருடைய கதை கட்டுரைகளை நிராகரித்து விட்டார்கள். பாமரமக்கள் அவருடைய எழுத தைப் பாராட்டுவதோடு நின்றுவிட்டனர். பணக்காரர்கள் அதைக்கூடச் செய்யவில்லை... இதனாலெல்லாம் திரு சதானந்தம் தம்முடைய வாழ்நாளில் பட்ட துன்பமும் துயரமும் கொஞ்சமன்று. எழுத்தையே மூலதனமாகக் கொண்ட அவர், வேறு தொழில் ஏதாவது செய்து வாழ்வதற்கும் தகுதியற்றவராயிருந்தார் (பக்கம் 142-143) என்று படைப்பாளிகள் படும் பாட்டினை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் விந்தன் அவர்கள். திரைப்படத்தைப் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும் வகையில் அவர் உரையாடலை அமைத்துள்ளார். 'துக்கி விடுவாரின்றித் துன்பக் கேணியில் நெடுநாட்கள் நீந்திக் கொண்டிருந்த அவருடைய மனைவி கடைசியில் ஒருநாள் களைத்துப் போனாள். முடிவு என்ன?