பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 137 கிடையாது; கிடையவே கிடையாது. அதற்குப் பதிலாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பருத்துக்கொண்டே வருகிறது; அவா.களுடைய குடும்பமும் எந்த விதமான கவலையுமின்றித் தழைத்துக் கொண்டே வருகிறது; அதற்கு வேண்டிய செல்வமும் பெருகிக்கொண்டே வருகிறது - அது எப்படி? - வரும்படியில்லாமல் இப்படியும் ஒருவன் வாழ முடியுமா? இப்படியும் ஒருவன் தேசத் தொண்டனாயிருக்க முடியுமா? - இதுதான் எனக்குப் புரியாத புதிராயிருந்தது! 'தலைவர்களைக் கண்டால் விழுந்தடித்துக் கொண்டு போய் மாலை போடுவதும் அவர்கள் ஏதாவது சொல்வதற்கு முன்பே கை தட்டுவதும் தவிர நமக்கு இநத அரசியல் உலகத்தில் வேறு என்ன தெரிந்து தொலைக்கிறது? ஆகவே, வரும்படி உள்ள தேச பக்தனாக வாழ எனக்கு வழி தெரியவில்லை.” இந்த நாவலின் நான் என்ற கதாநாயகன் செல்வம் கூட ஸ்நான அறையை நோக்கி விறுவிறுவென்று நடந்து (பக் 227) லட்சியத்திற்கு முழுக்குப் போட்டு விட்டு, பணம் பண்ணும் வித்தையில் இறங்கிவிட்ட போதிலும், பூணுாலை அறுத்தெறிவதுடன், தன் அப்பாவுக்கு ஒரு சூத்திரத்தியிடம் பிறந்த மகளை - முறைக்கு தன்னுடைய ஒரு சகோதரியை (செங்கமலம்) கெடுத்தவனின் (சிவகுமாரன்) அப்பாவைக் (குற்றாலிங்கம்) கொல்லவும அஞ்சாத - கடைசி வரை லட்சியத்தைக் கைவிடாத பாலு (ஐயர்)வையும் இங்கே சந்திக்கிறோம். (இதற்கு முன்பே சிவகுமாரனை வேறு வீராங்கனை யொருத்தி வெட்டி வீழ்த்தி விடுகிறாள்) வாய்ப்பு கிடைக்கும் இடத்திலும் அல்லாமலும் காதலை ஈவிரக்கமின்றி விமாசித்த அநதக் காலத்து எழுததாளர்களில் விந்தனைப் போல் வேறு யாராவது உணடா என்று தெரியவில்லை. ஆனால் பாலும் பாவையும் காதலும் கல்யாணமும் முதலிய நாவல்களில் அமர்க் களமாய் இயங்குவதுபோல் இந்தக் 'கண்திறக்குமா? விலும் காதலானது இயங்கத்தான் செய்கிறது. காதலை ஒரு பிரச்னையாகவும் கல்யாணத்தை ஒரு லட்சியமாகவும் கருதாத மணியைப போன்றவர்கள் காதலும்