பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 விந்தன் இலக்கியத் தடம் சரணம் சரணம் சரணம் பசியே பக்தி சரணம்! சரணம் சரணம் சரணம் முக்தியே மரணம் மரணம்! என்று முடித்த 30 எழுத்து வீச்சுகளும் அறிவின் வீச்சுச் சுடர் ஆகும்! சாதாரண அச்சுக் கோக்கும் தொழிலாளியாக அவர் வாழ்க்கைத் துவங்கிய நிலை புதிய உலகத்திற்கான வார்ப்படங்களை உருவாக்கும் சம்மட்டியாக, உலைக்களமாக அவரது எழுத்தாற்றல் அமைந்தது என்றால் அது எவ்வளவு வியப்புரிக்குரிய சாதனை! புதுக்கோட்டை பொன்னியில் - கண் திறக்குமா? நக்கீரன் என்ற புனை பெயரில் அவர் எழுதியபோதே அவரைப் பார்க்காமலே ஒரு பாசம், பற்று, மரியாதை எல்லாம் எனக்குண்டு! கூலிக்கு எழுத்தை விற்று, ஜாலிக்குத்ான் வாழ்க்கையே என்ற முடை நாற்ற எழுத்தாளர்கள் மொய்க்கும் இந்தப் புரையோடிய சமூகத்தில் விந்தனைப் போன்ற லட்சிய எழுத்தாளர்கள் தனித்தன்மை கொண்டு காரிருள் நீக்கிய கதிரொளி ஆவர்! வளர்க அவர் புகழ், 1982 {