பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விந்தன இலக்கியத் தடம் மாணவனும், தந்தை பெரியாரின் சீடனும் அறிந்த இந்த அனுபவத்தையே, எழுத்தாளர் விந்தனின் வாசகரும் அனுபவிக்கிறார்கள்! செந்தமிழில் வைதாரையும் வாழ வைப்பான் இறைவன் என்று தமிழ்ப் பக்திக் கவிஞர்கள் பாடியுள்ளனர். செந்தமிழ் அழகு மொழி, இன்ப மொழி, அன்பு மொழி! வைபவர்கள் உள்ளத்தில் இன்ப நினைவுகள், அழகு நயங்கள் இல்லாத நேரங்களில் கூட, அவர் பயின்ற மொழி அப்பண்புகளின் மரபில் வந்த செந்தமிழாய் இருந்தால், அப்பண்புகள் அவர் நாவினைக் கடந்து, உள்ளத்தினைக் கடந்து, இறைநல வாய்மை அழகும் இன்பநடமும் அவருக்கு ஊட்டி விடும் என்பதே இதன் கருத்து. எழுத்தாளர் விந்தன் தமிழகத்தின் டிக்கன்ஸ். ஆங்கில நாட்டு டிக்கன்ஸும், தமிழ் நாட்டு விந்தனும், விந்தனைப் போலவே எழுத்தாளர் வ.ரா.வும் மேற்கூறிய செந்தமிழில் வைதார் மரபு வகுப்பைச் சார்ந்தவர்கள் என்னலாம். டிக்கன்ஸ், வ.ரா., விந்தன் ஆகிய மூவருமே அழகு நாடியவர்கள். இன்பம் நாடியவர்கள் அல்லர்; அழகு தமிழ் அல்லது அழகு மொழியில் பழகியவர்கள் அல்லர். ஆனால் அழகு, இன்பம் அவர்கள் மொழியை, அவர்கள் தமிழை நாடிற்று. மூவருமே திட்டமிட்ட கலைத்திட்டம் உடையவர்கள் அல்லர்; ஆனால் கலைத்திட்டம் அவர்கள் படைப்புகளில் எப்படியோ வந்து விழுந்து விடுகிறது. மூவரின் ஒற்றுமைகள் இவை, வேற்றுமைகளும் உண்டு. டிக்கன்ஸ் டிக்கன்ஸிடமோ, அவர் மொழியிலோ, படைப்புகளிலோ கூட, அழகுணர்ச்சி, மெருகு, திட்பம் ஆகியவை கிடையாது. ஆனால், இந்த இல்லாமையே, வாசகரிடம் அவர் கொண்ட நேச பாசத் தொடர்பு முறைக்கு ஆற்றல் தந்து விடுகிறது. அவர் உள்ளத்திலும் மொழியிலும் இல்லாத பண்புகள் படைப்பின் பின்னணியிலிருந்து எழுந்து, வாசகர் உள்ளத்தில்