பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விந்தன இலக்கியத் தடம பாலும்பாவையும் என்ற அவரது புகழ் சான்ற படைப்பில் அகல்யா ஆணினத்துக்குப் பெண்ணினம் விடுக்கும் அறை கூவலென்றால், கனகலிங்கம் அதனை ஏற்றுப் போட்டியிட்டு வெற்றி நாடும் ஓர் ஆணினப் பண்புருவாகவே அமைகிறான். ஆனால் எழுத்தாளர் விந்தன் அவனைக்கூடத் தன்னைக் கடந்த ஒரு கண்கானா இலக்கு நேக்கிச் சென்று வெற்றி இலக்குச் சற்று முன்பே காலிடறி நின்று விடும் குறைபாடுடைய மனிதனாகத்தான் படைத்திருக்கிறார் என்று காணலாம். தமிழகத்தின் தொடக்க காலப் புதின ஆசிரியர்கள் பெரிதும் பொழுது போக்கு நோக்குடனேயே கதை எழுதினார்கள். ஆனால் அவர்களுக்கு ஓர் இரண்டாவது நோக்கமும் இருந்தது. ஒரு மனச்சான்றும் இருந்தது. முதல் நோக்கத்துக்குக் குந்தகமில்லாமலே தம் புதினத்தில் கதை முடியுமுன் ஒர் இடைப்பட்ட அத்தியாயத்தை ஒரு தனி அறவுரைக்கொரு சமய அல்லது அரசியல் அல்லது சீர்திருத்தக் கட்டுரைக்கோ ஒதுக்கி வைத்து, அந்த இரண்டாம் நோக்காகிய மனச்சான்றையும் நிறைவேற்றிக் கொண்டார்கள் வாசகர்களுக்கும் இது அவ்வளவு தொல்லைதரவில்லை. அநத அத்தியாயம் வந்தவுடன் அவர்களும் அதை ஒதுக்கி விட்டு முன்பின் அத்தியாயங்களையே படித்துவிட்டுத் தமது பொழுது போக்குக் கதை இன்பத்துக்குத் தடை வராமல் பார்த்துக் கொண்டார்கள். இந்த இரு திசைப்பட்ட ஏய்ப்பு - எதிா ஏய்ப்புக்கு விந்தன் படைப்புகளில் தேவையேயில்லை. விந்தனின் மனசசான்று வேறு, கலைப் படைப்பு வேறு என்ற நிலை கிடையாது; அவர் மனச்சான்றே கலைப் படைப்பாய் அவர் கதையில் அமைந்துள்ளது எழுத்தாளர் விந்த னின் மிக நெருங்கிய எழுத்துலக உறவினர்களான டிக்கன்ஸ், வ.ரா. போன்றோருக்கு இல்லாத பல முனைப்பான தனித் தன்மைகள் விந்தனுக்கு உண்டு முதலாவதாக அவர் இலக்கு மற்ற இரு வருக்கும் உரியவையான, சிறு சிறு அளவான திருத்தங்கள் அதாவது சமுதாயச் சீர்திருத்தங்களோ, அல்லது பழக்கவழக்க மாறுபாடுகளோ, அல்லது