பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 29 நகர மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு விடுதலை பெறுவதும் நடைபெறுகின்றன. இம் மூன்று நாடகங்களுக்கும் அடிப்படை ஏதுவாக அக்குடும்பத்துக்கு விதிக்கப்பட்ட சாபம் இயங்குகிறது. மேற்கூறிய பண்டைக் கிரேக்க இதிகாசக் கதையிலே, தெய்வம், கொலைப்பாவம், விதி, சாபக்கேடு முதலியன பற்றிய ஆழ்ந்த நம்பிக்கை பிரிக்கவியலாப் பண்பாக உள்ளது. எனினும் அவற்றை நீக்கி, துரோயப் போருக்குப் பதிலாக, அமெரிக்க உள் நாட்டு யுத்தத்தை (1861-1865) பகைப்புலமாகக் கொண்டு நவீன நாடகமொன்றை (மூன்றின் தொகுதி) எழுதினார் ஓநீல். "கிரேக்கர்கள் விதி எனக் கொண்ட பொருளுக்கு ஏறத்தாழச் சமமாகும் உளவியல் உந்துதலின் அடிப்படையிலே, தெய்வம் உண்டென்றும், அறம் நின்று கொல்லும் என்றும் நம்பாத அறிவுடைய நவீன நாடகப் பிரியர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அதனைப் பார்த்து மன முருகும் வகையிலும் அமைந்த நாடகத் தொகுதி' என்று ஒரு திறனாய்வாளர் இப்புத்தாக்கத்தை மதிப்பிட்டிருக்கிறார். ஜோய்ஸ், ஓநீல் முதலியோரது படைப்புக்களுடன் பாலும் பாவையை ஒப்பிட வேண்டுவது அவசியமில்லை. ஆயினும் அது பிறமொழிகளில் இருப்பதையொத்த நவீன நூல் என்பதை உணர்த்த இக்குறிப்புக்கள் அவசியமாயிற்று. அது மட்டுமல்ல. ஜோய்ஸ், கலைப் படைப்பு, தன்னளவிற் பூரணமானது. புற உலகின் ஒப்புமை உணர்வை வேண்டாது தனித்து இயங்கவல்லது’ என்ற கோட்பாட்டிற்கியைய இலக்கியஞ் சமைத்தவர். சிக்கலான உத்திகளுக்கு முதலிடம் கொடுத்தவர். தமது நாவலையே ஒரு ஐதீகமாகக் கருதியவர். அத்தகையவரது, வேலைப்பாடுகள் நிறைந்த பெரு நாவலுக்கும் கல்கியில் தொடர் கதையாக வந்த நாவலுக்கும் குண வேறுபாடுகள் பலவுண்டு. விந்தன், வ.ரா., பாரதியார் ஆகியோர் மரபையொட்டி, இழுக்கை ஒழுக்கவும், ஒழுக்கத்தை வளர்க்கவும், நமக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கவும் குறிக்கோளோடு எழுதியவர். இது