பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 31 "ஆழ்ந்த மனச்சுழல்களில் நம்மைச் செருகும் தன்மை பெற்றவை இங்குள்ள கதைகளில் சில. ஒரு முறைக்கு இருமுறையாக அவைகளின் கருத்து நம்மைத் துழாவ வைப்பதற்குக் காரணம் அதுவே. அபிப்பிராயத்தின் தொனி விசேஷம் (suggestion) சில சமயம் நம் உள்ளங்களைத் தொட்டுவிடுகின்றது. சில வேளைகளில் உலுக்கியும் விடுகின்றது.” சந்திரசேகரன் விதந்து கூறும் தொனி விசேஷம் பாலும் பாவையிலும் நிறைய உண்டு. அகல்யா கூறுகிறாள் : “வந்தான்; ஆனால் அவன் மகா சாது பெயர் தசரத குமாரன். சாட்சாத் தசரத குமாரனோ சீதா தேவிக்காகச் சிவதனுசை முறித்தான்; மாரீசனை வதைத்தான், இராவணனுடன் போரும் தொடுத்தான். எங்கள் தசரத குமாரனோ ஒருமுறை என்னுடன் வந்து 'மாட்டினி ஷோ பார்க்கக்கூட விரும்பவில்லை - அவ்வளவு பயம்! என்னைப் பார்த்து பெருமூச்சு விடுவதோடு தன் காதலை அவன் நிறுத்திக் கொண்டான். "இளமையின் இதயத் துடிப்பை அறியாத அவனுடைய நடத்தை எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை...' பழைய அகலிகை இரு அச்சிலே மட்டுமே வார்க்கப்பட்டவள். வான்மீகியின் சித்திரிப்பின்படி இந்திரனைக் கூடுவதில் பெருமகிழ்ச்சியடைந்தவள். நெஞ்சறிந்து இன்பத்தை ஏற்றவள். பிந்திய காவியங்களிலே ரிஷிபத்தினியான அகலிகை கற்புக் கனலியாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறாள். இது இக்காலத்துக்குப் போதிய குணச்சித்திரிப்பு அல்ல. நன்மை, தீமை என்ற இருமுனைப் பாகுபாடு இலட்சிய காவியங்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். சிக்கல்கள் நிறைந்த நவீன வாழ்க்கைக்குப் பொருந்துவதொன்றன்று. விந்தனின் அகல்யா கற்பு, கற்பின்மை என்ற நிலைகளை அதிகம் எண்ணாமல் எப்படியாவது வாழ வேண்டும் என்றே ஆசைப்படுகிறாள். அகல்யா சிந்திக்கிறாள்