பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 49 இடையே கோயில்கள் வேறு குறுக்கிடும். வாத்தியார் வைத்தியலிங்கம் பிள்ளையைவிட எத்தனையோ விதத்தில் உயர்ந்தவர்கள் பலர். காரிலும் மற்ற வாகனங்களிலும் அதே ாஸ்தாவில்தான் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம் தங்களைக் குறுக்கிடும் கோயில்களைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது நமது வைத்தியலிங்கமோ, எந்தக் கோயிலைக் கனடாலும் சரி உடனே தமது பாதரட்சைகளைக கீழே விட்டு விட்டு, பவ்வியமாக ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான அப்பால செல்வாா இதில் ஆச்சரியம் என்னவென்றால், கோயிலுக்குக் கோயில் நின்று தொழுது சென்ற வாத்தியாா பூலோகத்தில நரகத்தைக் கண்டார்; தொழாமலே சென்றவர்களோ சொர்க்கத்தைக் கண்டார்கள். ஆயினும் வாததியார் வைத்தியலிங்கம் எத்தனையோ விதத்தில் கொடுத்து வைத்தவர். தங்களுடைய பிள்ளைக்குக் கல்யாணம் ஆகும் வரை தாங்கள் இருந்தால் போதுமென்று பகவானை அல்லும் பகலும் அனவரதமும் பிரார்த்தனை செய்து கொண்டு வந்த அவருடைய பெற்றோர், அவருக்கு ஏழாவது குழந்தை பிறந்துங்கூட உயிருடன் இருந்தார்கள் கல்யாணம் பண்ணிக்கொண்டு புக்ககம் போன தங்கை, அண்ணாவை நீண்ட நாட்கள் பிரிந்திருக்க மனமில்லாமலோ என்னவோ.. அடுத்த வருவதுமே விதவைக் கோலத்துடன் பிறந்தகம் வந்து சேர்ந்துவிட்டாள். அவருடைய மனைவி மங்களமும் சீதனமாக ஒன்றும் கொண்டு வராமல் போகவில்லை. தன்னுடன் பெற்றோரை இழநத இரண்டு தங்கைமாரைக் கட்டி கட்டியாகக் கொண்டு வந்திருந்தாள். ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர் ஏனோ கொடுத்து வைக்கவில்லை. அதாவது, அவருக்குப் பிறந்த ஏழு குழநதைகளில், நாலாவதாகப் பிறந்த பையன் மட்டும் தான் உயிரோடு இருந்தான். அவனுக்கு இப்போது ஆறாவது வயது நடநது கொண்டிருந்தது ஆக எட்டு ஜீவன்களும் வாத்தியார் வைத்தியலிங்கத்தின் வரும்படியை எதிர்பார்த்துத் தங்கள் காலத்தைக் கழித்து வந்தன. இந்த லட் சனத்தில்தான் தன்னுடைய ஏகபுத்திரனான ஜயச்சந்திரனுக்கு நல்ல முறையில், அட்சாரப்பியாசம் செய்து வைக்க