பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 69 { 3. அன்பு "மிஸ் நளாயினி 1970 ‘நேற்று வந்தவள்’ "காதற் கதை' "அவள் என்ன வானாள் 'முன்னல்’ போன்றவை அவருடைய இத்தகைய கதைகளுக்கு உதாரணம். 'கவைக்குதவாத காதல்’ என்று அவர் கூறியுள்ளார் இந்த நோக்கின்படியேதான் அவர் காதலையும் அணுகுகிறார். மேற்கூறப்பட்ட கதைகளில் தற்காலப் போலிக் காதலும் கேலிக்குள்ளாக்கப்படுகிறது. உதாரணமாக, காதற் கதை' என்ற கதையில் ஒரு வாலிபன் குளத்தில் குளிக்கும் பெண்ணைத் தவறுதலாக, “அவள் விழுந்து விட்டாள் என்று எண்ணித் துக்கப் போய் அவள் அவனை அடிக்கும் செயல் பற்றியது. "மிஸ் நளாயினி 1970 என்பது ஒரு பெண்ணின் காதலுக்குச் சோதனை வைக்கும் கதை. இதே தன்மை வாய்ந்தவைதாம் மற்ற கதைகளும், ஆண் - பெண் உறவை விந்தன் வியாபாரமாக்கவில்லை அதை அவருடைய விமரிசனப் பாணியிலே கையாளுகிறார். இந்த உதாரணங்கள் யாவும் விந்தன் சிறு கதைகள் பற்றிய ஒரு முடிவுக்கு வருவதற்குப் போதுமானவை. விந்தனுடைய வாழ்வு நோக்கில் அவர், சுரண்டலுக்கு உள்ளானவர்கள், கஷ்டப்படுபவர்கள், ஏழைகள், ஆகியவர்கள் சார்பில் நின்று எழுதுகிறார். இதனால் அவரை ஒரு சார்பு நிலை எழுத்தாளர் என்று பெரும்பாலும் கூறலாம் மனிதாபிமான நோக்கில் அவர் ஏழைகளைக் காண்கிறார்; உழைப்பவர்களைக் காண்கிறார். அந்த மக்களுக்கு எதிராக இருக்கும் இலக்கியங்களைச் சாடுகிறார்.