பக்கம்:வினோத விடிகதை.djvu/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வினோத விடிகதை.

மல்ல, தண்டை சிலம் போசையிடும் பாதத்தாளே தந்திரமா யிக்க தையை சாற்றுவாயே. (செக்கு)

காலுமிரண்டுண் டெழுந்து நடக்க மாட்டாள் கண்ணிரண்டும் மேல்சிமிட்டி விழிக்கமாட்டாள் கோலுண்டு கானருப்பாள் கத்திய ல்ல, கூன்வளர்ந்து முதுகு முண்டு நிமிரமாட்டாள் பாலுகந்து குடித்தறியாள் பாக்குத் தின்பாள் பகருமணல் மூட்டி யிலைவடிதே வாழ்வாள் மேலினிய வாசமது விசுமானே மெல்லியரே கதை விபரம் விடிவிப்பாயே. (பாக்குவெட்டி)

உடல் நீண்ட பாதமுண்டு கிண்ணமல்ல, உச்சிதமெய்க்கண்களு முண்டிந்திரனல்ல, முடியில் கலசுங்குண்டு குல்லாவல்ல முழையைப்போல் துவாரமுண்டு புருசுமல்ல இடநிறைந்த சபையாடும் லவரல்ல இசையுடன் படி நடக்குந் தாசியல்ல குடைத்தநிகர் முகமாதே கோமளாங்கிநீ கூசாமல் கதை விபரம் கூறுவாயே. (நாகசுரம்)

வாய்தனிலே நெருப்பெரியும் பேயு மல்ல வாய்வையுண்டு வயர் வளர்க்கும் பாம்புமல்ல, தேய்வுடன் வாய்வைக் கூட்டுந் தேவனல்ல செங்கையால் மூடித்திறக்குஞ் சிமிழுமல்ல, பாய்படுத்துக்கால்கிளப்பும் பம்பரத்தையல்ல படியிலுள்ள சொல்லரில் வாழ்மங்கையல்ல, செய்போன்ற குகலைமொழி யாரணங்கே சித்திரமே யிக்கதையை செப்புவாயே. (துருத்தி)

மோதிரமும் வளை பூணும் மாது மல்ல, முழுதலைக் கெண்ணெய் இடும் வணிகனல்ல, சோதிடனல்ல சடைவிடுக்குங் கூந்தலல்ல குச் சுதொங்கல் சுங்குங் கூத்தாடியல்ல, சோதிமெய்யில் நூலணியும் ம றையோர் நல்ல கொடுத்திடக் கால்பிடித்தோடுஞ் சுனங்கனல்ல சீத மலர்போன் றயிரு அடியினாளே செண்பகமே யிக்கதையைச் செப்புவாயே. (செறுப்பு)

பஞ்சிதனைப் பூசித்து அகம் பாதுகார்க்கும் டலநாளும் போர்வையிட்டுப் படுத்துறங்குந் தஞ்சமென விழுந்தவர் கடலையைத்தூங்கும் காழ்வில்லாதுஞ் சகலமெத்தை தனிலே நானும் வஞ்சமுடன் மேல் விழுந்து மருவிப்பார்க்கும் வசியமுறு காசிவேசி யல்லத்தேறும் தஞ்சமென யோகி முதல் வணங்கச் செய்யும் தார்குழலேயிக்கதையை சாற்றுவாயே. (தலைகாணி)

அக்கினியில் நின்று விளையாடி பார்ப்பான் அம்புவியில் யாவருக்கு பச்சமீபாவான் பக்குவமாய்க் கொலை செய்து மருவி வாழ்வானது வேட்டைசெய்வான் தனிவழிக்குத் துணையாகிக் காவலாவான் முக்கனியும் சர்க்கரையு டாலோடொத்த மொழியணங்கே யிக்கதையை மொழிகுவாயே. (துப்பாக்கி)

கிள்ளுவது பாற்பதுவுந் தேய்ப்பதுண்டு கீர்த்தியுடன் தானொடிக்கி குலுக்கலுண்டு அள்ளியெண்ணெய் நீருடன் சேர்ந்தடலுண்டு அனைவர் பின்னே சித்திக்கை யேற்பதுண்டு கள்ளருந்துங் காளை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வினோத_விடிகதை.djvu/6&oldid=1085582" இலிருந்து மீள்விக்கப்பட்டது