பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுச் சிந்தனைகள் 2.3

யாட்டை மதித்து நேர்மையாக நடந்து கொள்ப வர்கள், மற்றவர்களிடம் மட்டுமல்ல, ஆட்டத்தின் முடிவினைப்பற்றியும் பயப்பட வேண்டிய அவசியமே யில்லை. அவர்கள் பயப்படவும் மாட்டார்கள்.

நடையும் விடையும்

ஒரு நல்ல ஆட்டக்காரர் என்ற பெருமை யானது, எதிராட்டக்காரர்களைக் குறுக்கு வழியில் சென்று திண்டாட வைக்கும் சண்டமாருதச் செயல்களினல் கிடைக்காது. தென்றல் தவழ்ந்து குளுமை தருவது போல அன்பு செயல்களிலும் பண்பு வழிகளிலும் நடந்து காட்டும்போதுதான் கிடிைக்கிறது.

ஆதரவு

உண்மை பேசுகின்ற ஒருவனுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதில்லை என்பார் கள். ஏனெனில், அவன் பல பேரிடம் பல மாதிரி யாகப் பொய்யைச் சொல்லி, பிறகு யாரிடம் என்ன பேசினுேம் என்று மறந்து விட்டு மாட்டிக் கொள்ள நேரிடும். உண்மை பேசுபவன் ஒன்றையே தான் பேசுவான். அதுபோலவே, நேர்மையுடன் விளையாடு கிற யாரும், எல்லோரிடமும் போய் எனக்கு ஆதரவு தாருங்கள், உற்சாகம் ஊட்டுங்கள் என்று ஆள் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டாம். உண்மைக்கும் நேர்மைக்கும் ஆதரவு எப்பொழு துமே உண்டு.