பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.18 - விவாகமானவர்களுக்கு - 2. இரண்டு நாளான பின் வடிகட்டிக்கொண்டு கொஞ்சம் நல்ல கர்ப்பூரத்தை ஸ்பிரிட்டில் கரைத்து வேப்ப நெய்யுடன் நன்ருகக் கலந்துகொண்டு ஸ்பிரிட் ஆவியாகப் போய்விடும்வரை வெயிலில் காயவைக்க வேண்டும். அதன் பின் அந்த நெய் கர்ப்பூர வாசனையுடைய தாயிருக்கும். அதைத் தேனைப் போலவே உபயோகிக்க வேண்டியது. அது சொற்பவிலையில் எங்கும் கிடைக்கும். நல்ல கர்ப்பத் தடைச் சாதனம். ஆணுக்கோ பெண்ணுக்கோ கிரந்தி சம் பந்தமான நோயிருந்தாலும் குணம்செய்வதாகும். அதை ஆண்குறியின் தோலும் பெண்குறியின் தோலும் உறிஞ்சிக் கொள்வதால் உடம்புக்குப் பலமுண்டாக்கும் நல்ல டானிக்கும் ஆகும். கர்ப்பவாசற் கதவுகள் பழய காலத்தில் பெண்கள் கர்ப்பத்தைத் தடுக்கும் பொருட்டு எலுமிச்சம்பழத்தை இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் நடுவில் ஒரு பள்ளம் குடைந்து எடுத்து வைத்துக் கொண்டு சம்போகம் ஆரம்பிக்குமுன் பெண்குறிக்குள் செலுத்தி பழத்துண்டின் பள்ளத்தைக் கர்ப்பப்பையின் கழுத்தில் ப்ொருத்திவைத்து விந்தைக் கர்ப்பப்பைக்குள் போகாதபடி செய்வார்களாம். எலுமிச்சம்பழம் எங்கும் எப்பொழுதும் சொற்ப விலை யில் கிடைக்கக்கூடிய வஸ்து. அதன் புளிச் சத்து சுக்கில உயிர்களைக் கொல்லக்கூடிய சத்திவாய்ந்தது. பெண்குறி யில் கிரந்திப்புண் இருக்குமானல் எலுமிச்சம்பழ ரசம் பட் டதும் கர்ந்தும், அதுவும் ஆண்மகன் அறிய வேண்டியதே. ஆயினும் சம்போக சமயத்தில் எப்பொழுதும் எலுமிச் சம்பழம் பக்கத்தில் இருக்கும் என்ற நிச்சயம் இல்லை. அது தக்க பருமனுள்ளதாயும் பொருத்தமான பள்ள முடை பதாயும் இருக்கவேண்டும். அது கழன்றுபோகாதபடி சரி யாகப் ப்ொருத்திவைக்கவும் வேண்டும். அதனால் இதைச் சாதாரணமாக எப்பொழுதும் உபயோகிக்க முடியாததாக ஆகின்றது.