பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 147 இயற்கைக்கு விரோதம் 'இதர ஜீவராசிகள் எவையேனும் கர்ப்பத்தடையை அனுஷ்டிக்கின்றனவா ? அதுபோல் தானே நாமும் குழந்: தைகளைப் பெறவேண்டியவர்கள். அப்படி இருக்க நாம் கர்ப் பத் தடையைக் கைக்கொள்வது இயற்கைக்கு விரோத, மல்லவா’ என்று கேட்கிரு.ர்கள். மற்ற ஜீவராசிகள் கர்ப்பத்தடையை அனுஷ்டிக்க வில்லைதான். ஆனல் அதுபோல் நர்மும் எத்தனை குழந்தை பெற இயலுமாஅத்தனை குழந்தைகள்ையும் ப்ெற்றுக் கொண் டிருந்தால் உலகம் தாங்குமா? தாங்காது என்று முன்ன மேயே கண்டோம். அந்த நிலைமையில் நாம் சும்மா கையைக் கட்டிக் கொண்டு இருப்பதா? இயற்கை சந்தான விருத்திக்கான உறுப்புகளையும் உணர்ச்சிகளையும் அமைத்து வைத்திருக்கிறது, அதன் கருத்துப்படியே ஜீவராசிகளும் சந்தான விருத்தி வேலையை நடத்தி வருகின்றன, ஆனால் அப்படி விருத்தியாகும் சந் தானங்கள் எல்லாம் உயிரோடு ஜீவித்திருக்கின்றனவா? இல்லையே. அவைகள் அளவுக்கு மிஞ்சிப் போகாதபடி சந்தான விருத்திக்கு ஏற்பாடு செய்யும் அதே இயற்கை சந்தான அழிவுக்கும் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறது. அந்த ஏற்பாடுகள் பஞ்சம் - நோய் - கொலை ஆகிய மூன்று தடைகள். சிறு செடிகளை முள்ளும் களையும் கொல்லு கின்றன. நோய்க் மிருதுகள் மிருகங்கள்ையும் தாவரங்களையும் ஆயிரக்கணக்காக அழித்து விடுகின்றன. ஜீவராசிகளுக்குள் சண்டையும் கொலையும் நடந்து கொண்டேயிருக்கின்றன. இதுபோலவேதான் மனிதரிடையும் பண்டைக்காலத். தில் ஜனத்தொகை பெருகும் பொழுதெல்லாம் நோயோ, பஞ்சமோ, போரோ உண்டாகி ஜனங்களை அழித்து வந்தன. இப்பொழுதும் அவை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆயினும் மனிதன் விஞசான வளர்ச்சியின் மூல்மாக அதி கமான அளவு பஞ்சத்தையும் பிணியையும் குறைத்து விட்டான். அதனால்தான் உலகத்தில் பதினயிரவருஷ காலத்தில் வளர்ந்து வந்த ஜனத்தொகை சென்ற 200 வருஷ காலத்தில் இரட்டிப்பாக ஏறிவிட்டது.