பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 149 அத்துடன் ஏதேனும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட் டால், உடனே சிலர் இதென்ன புது விஷயம், இதல்ை என்ன நன்மை உண்டாகப் போகிறது, இதெல்லாம் இயற். தைககு விரோதமல்லவா என்று கூற ஆரம்பித்து விடுவார் கள். குளோரோபாம் கொடுத்துக் குழந்தை ப்ெறச் செய்ய லாம் என்ருல் உடனே குழந்தை பெறும்பொழுது பிரசவ வேதனை உண்டாவது இயற்கைதான்ே, அதைத் தடுக்க எண்ணலாமா என்று கேட்பார்கள். இப்படிப்பட்டவர்கள் ஆகாய விமானங்களைக் கண்டதும் நாமும் பட்சிகளைப்போல் பறப்பது இயற்கையின் விருப்பமாயிருந்தால் நமக்கும் சிறகுகள் அமைந்திருக்கமாட்டாதா என்று கேட்ப்ார்கள். அமெரிக்காவில் அடிமை வியாபாரம் நடந்து கொண்டிருந்: ததை நிறுத்திவிடவேண்டும் என்று பெரியோர்கள் இதே 'இயற்கைக்கு விரோதம்' என்ற வாதத்தையே கூறி. ஞர்கள் மற்ற ஜீவராசிகள் விவாகம் செய்கின்றனவா? அவை: கள் இஷ்டம்போல்தானே திரிகின்றன. அவைகளிடம் குடும் பத்தையும் காணுேம், குழந்தைகளிடமுள்ள வாஞ்சை யையும் கானேம், உறவு முறையும் கானேம், நட்பு முறை யும் காணுேம். நாமும் அவற்றைப்போல் நடக்க வேண்டு மானல் விவாகம்செய்யாமல் இருக்கவேண்டும் அல்லவா? அப்ப்டி யாரேனும் கூறுகி ருர்களா, இல்லையே? ஒரே புரு ஷனும் ஒரே மனைவியுமாக இருக்கவேண்டும் என்றே கூறு கிருர்கள். அது இயற்கைக்கு விரோத மல்லவா? விவாகம் செய்து கொள்வது இயற்கைக்கு விரோதமில்லை என்ருல் வேண்டாத கர்ப்பத்தை தடுப்பதும் இயற்கைக்கு விரோத மாகாது. * இப்படி இயற்கையில் காணப்படாதவைகளேயும் இது வர்ை நடந்து வரும் வழக்கத்துக்கு மாறுபட்டவைகளேயும் தவருனவை, வேண்டாதன என்று ஒதுக்குவிட்டால் நம: முடைய நாகரிகம் முழுவதையும் ஒதுக்கி விட்டவர்களே யாவோம். ஆதலால் எது எவ்வளவு நவீனழாயிருந்தாலும் அது அவசியமா, நல்லதுதான என்று மட்டுமே ஆராயநது. அவசியம், நல்லதுதான் என்று கண்டால், அஞ்சாமல் கைக் கொள்ள வேண்டியதே நாகரிக வளர்ச்சி யாகும். -