பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை- I 5.1 சம்போகம் செய்து விந்திலுள்ள சுக்கில உயிர்கள் இனைப்பைக்குள் போய் முட்டையோடு கலப்பதாயிருந்தா லும் அந்த உயிர்களில் ஒன்றுதானே கலக்கிறது. மற்றவை கள் எல்லாம் மடிந்து தானே போகின்றன? அதுமட்டுமன்று முட்டையோடு கலந்த பிறகும் அவை இரண்டும் கர்ப்பப் பையில் ஒட்டிக் கொள்ளாவிட்டால் வெளியே வந்து இறந் துதானே போகும்? கர்ப்பமாயிருக்கும்பொழுதும், 40, 50 வயதில் மாத விடாய் நின்ற பின்னரும், சம்போகம் செய்கிருர்களே, அப் பொழுது வெளியாகும் விந்திலுள்ள சுக்கில உயிர்களின் கதி என்ன? சுக்கில உயிர்களின் கொலையைப்பற்றி மட்டும் பேசு கிருர்களே. பெண்ணின் சினைப்பையில் உண்டாகும் முட்டை களும் உயிர்தானே, அவைகளும் சுக்கில உயிர்களுடன் சேர சந்தர்ப்பம் கிடையாவிட்டால் இறந்துதானே போகின்றன. அதல்ை கலியாணமாகாத கன்னிகளும் கலியாணமாயும் கர்ப்பமாகாத பெண்களும் முட்டைகளைக் கொன்று வருவ தாகக் கூறலாமா? - அதோடு,நாம் கர்ப்பத்தடை மருந்துகளை உபயோகிக் கும்பொழுதெல்லாம், இந்தத் தடவை கர்ப்பம் உண்டாவ தாயிருந்தது, அதைத் தடுத்து விட்டீர்கள் என்றுயாரேனும் நிச்சயம் கூற முடியுமா? அப்படியே நிச்சயம் கூறக் கூடிய தாயிருந்தாலும் நாம் மருந்துகளால் கொன்று விடுவது கோ டானுகோடி_உயிர்களில் முட்டையோடு சேரும் அந்த ஒரு உயிரை மட்டுமே யாகும். அதைக் கொல்வதும் பிற உயிர் களைக் கொல்வது போன்றதே. மனித உயிரைக் கொல்வ தாக ஆகிவிடாது. கர்ப்பமுற்று ஏழு மாதம் சென்ற பிறகே அதை மனித உயிர் என்று கூறமுடியும் என்று டர்க்டர்கள் கூறுகிருர்கள். ஆகவே நாம் கொல்வது ஒரு உயிரையே; அதுவும் சுக்கில உயிரே யன்றி மனித உயிரன்று. அப்படிக் கொல்வதும் உன்னதமான லட்சியங்களுக்காகவே. அப்படிப் புரை தீர்ந்த நன்மை பயப்பதால், அந்தக் கொலையும் கொல்லாததேயாகும். - - சுகக்கேடு கர்ப்பத்தடையை அனுஷ்டித்தால் ஆரோக்கியம் கெட்