பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - I 89 ஆதலால் இனியேனும் இந்த நிலைமை நீடித்திருக்காத படி நாம் கர்ப்பத்தடை விஷயத்தைப் பகிரங்கமாகப் பேசவும், சர்ச்சை செய்யவும் வேண்டும். இது விஷயத்தில் அதிகமாக முன்னேற்றம் உண்டாக்கச் சக்தி வாய்ந்தவை பத்திரிகைகளே. ஆஞ்ல் அவைகளும் இந்த அவசியமான விஷயத்தில் அணுவசியமாக மெளனமே கொண்டு நிற்கின்றன. இதுமாதிரியான விஷயங்களில் எவ்வளவு கூச்சமு மில்லாமல் பேசக்கூடியவர்கள் டாக்டர்கள். ஆல்ை அவர்களும் கர்ப்பத்தடையைப் பற்றிக் கூறவேண்டிய அவசியம் நேர்ந்தாலுங்கூட, அதைக் கூருது இருந்து விடு கிருர்கள். அநேக டாக்டர்களுக்கு இது விஷயத்தைப் பற்றித் தெரியவும் தெரியாது. வைத்தியக் கல்லூரிகளில் கற்பிப்பது மில்லை; இவர்களாக் கற்றுக் கொள்வதுமில்லை. அப்படியே கற்ருலும் அரைகுறையாகவே அறிந்து கொள் கிருர்கள். ஆராய்ச்சி செய்வதுமில்லை! அனுஷ்டித்துப் பார்ப் பதுமில்லை. அதன் பயனுகச் சில டாக்டர்கள் கர்ப்பத்தடையைத் தீது என்று கூடத் தைரியமாகச் சொல்லி விடுகிரு.ர்கள். கர்ப்பத்தடை வைத்திய சம்பந்தமுடையதா யிருப்பதால் சாதாரண ஜனங்கள் அவர்கள் கூறுவதையே வேதவாக்காக நம்பிவிடுகிருர்கள். இப்படி ஆராய்ச்சியோ அனுபவமோ இல்லாமல் கூறிவிட்டால் எத்துணை அனர்த்தங்கள் உண்டாய்விடுகின்றன? கர்ப்பத்தடைச் சாதனங்களை மருந்து ஷாப்புக்களில் வாங்கப்போனல், அங்குள்ள வர்த்தகரைத் தனியாகக் கூட்டிப்போயே விசாரிக்க வேண்டியிருக்கிறது. அப்படி விசாரித்ததும் அவர், சாதாரணமாக துன்மார்க்கரே கர்ப்ப, தடைச் சாதனங்களை உபயோகிப்பதாகக் கேட்டிருப்பதால் நம்மையும் அப்படியே எண்ணிவிடுகிருர். அவருடைய முகக் குறியைக் கண்டதும் நாம் மேற்கொண்டு கேளாமலும் வாங்காமலும் வந்துவிடுகின்ருேம். இப்படிக் காதலை இழிவாக்கிய கேட்டால் எங்கு பார்த்தாலும் பொய்யும் சங்கோஜமும் சேர்ந்து உண்மை யான நல்ல் விஷயத்தை நாசமாக்கி வருகின்றன. அதைத் தடுப்பது நமது கடன். அதல்ை நாம் கர்ப்பத் தடைச் சங்கங்கள் ஸ்தாபித்துப் பிரச்ாரம் செய்யவும் - கர்ப்பத்