பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎲᏋ - விவாகமானவர்களுக்கு - மகா சமுத்திரத்தில் அமிழ்ந்து, அதன் அடியில் உள்ளவை எவை என்று அறியப் பெருமுயற்சிகள் செய்கின்ருன். இங்கிருந்தே ஐயாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள நண்பரோடு பேச பேச்சுக் கருவிகள் அமைக்கிருன். வானத்தில் பறக்கிருன், ஜலத்தில் நீந்துகிருன், ஒவ்வோரு நாளும் புதிது புதிதாகக் காரியங்கள் செய்கிருன். அவன் முயற்சிக்கும் அளவில்லை. அவன் காரிய சித்திக்கும் அளவில்லை. மனிதன், அதி ஆச்சரியமான ஆதி அற்புதவிஷங்களைப்பற்றி அல்லும் பகலும் இடைவிட்ாது ஆராய்ச்சி செய்கிருன். ஆராய்ச்சியின் பயனய் நவ நவமான உண்மைகள் அறிகிருன். அவ் வுண்மைகளின் துணை கொண்டு அமரரும் பிரமிக்கத்தக்க காரியங்களைச் செய் கிருன். உலகில் ஸயன்ஸின் முன்னேற்றம் வாயுவேகம் மனேவேகமாய்ப் பெருகிக்கொண்டிருக்கிறது. ஆனல் அற்புதத்திலும் அதி அற்புதமானது மக்கள் சிருஷ்டி அன்ருே ஆயுனும் அதைப்பற்றி ஏன் இந்த அலட்சியம்? பசு கன்று ஈன்று பத்து மாதங்கள்தான் சாதாரணமாய்ப் பால் கொடுக்கும். கூடினல் தினந்தோறும் நாலைந்து பக்கா பால்தான் கொடுக்கும். பாலில் வெண்ணெய்யும் சுமாராகத்தானிருக்கும். ஆனல் மனிதன் இன்று, 'ஏன் 3வருஷங்கள் பால் தரக்கூடாது, ஏன் தினசரி 16 பக்கா பால் கிடைத்தலாகாது, ஏன் பக்காவுக்கு ஒரு பவுண்டு வெண்ணெய் வீதம் காணப்படாது?’ ’ என்று யோசித்தால், இது முடியாத காரியம் என்று எண்ணிச் சும்மா இருந்து விடுவதில்லை. முடியும் என்று எண்ணுகிருன், நினைத்த வண்ணம் செய்து முடித்தும் விடுகிருன். ! மனிதன் மாம்பழம் சாப்பிடுகிருன், சாப்பிடும்பொழுதே யோசிக்கிருன்: 'சில மரங்கள் ஏராளமாய்க் காய்க்கின்றன, ஆனல் பழங்கள் சுவையாயிருப்பதில்லை. சில மரங்கள் சுவை மிகுந்த கனிகள் தருகின்றன. ஆனால், அவை வெகுசிலவே. சில மரங்கள் தரும் கனிகள் சிறியவை, சில மரங்கள் தருபவை பெரியவை. சில மரக் கனிகள் நார் உடையவை. சில மரங்களில்தான் காயும் கனியும் உண்ணத் குதந்தவை. இப்படிப் பலவிதமாயில்லாமல் ஒரு ஜாதிமாமரம் சிருஷ்டித் தால் என்ன ? ஏராளமான கனிகள் தரவும்வேண்டும். அவை பருமனயும், சுவை மிகுந்தனவாயும், நார் இல்லாமலும், வாசனை உள்ளனவாயும் இருக்கவேண்டும். அத்தகைய மரம்