பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூல் பற்றி அறிஞர் கருத்துக்கள் ஹிந்து இதன் ஆசிரியர் விளக்கச் சிரமமான விஷயத்தை எளியr. நடையில் தெளிவாக எழுதியுளர். படிக்கச் சுவையுள்ள தும் பயன் மிகுந்ததுமான நூல், தமிழ் மக்கள் ஒவ்வொரு வர் இல்லத்திலும் இடம்பெற்த் தகுதியுடையது. சென்னை விவசாய டைரக்டராக இருந்த ஸர் டி. எஸ். வெங்கட்டராமன் இச் சிறந்த நூல் ஏராளமாக விற்பதையும் இதில் கூறி" யுள்ள் நல்ல கருத்துக்களைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள் வதையும் அறிய மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். தினமணி விவாகமானவர்கட்கு ஒரு யோசனை என்னும் இப் புத்தகம் கர்ப்பத்தடை முறைகளை விஞ்ஞானரீதியாக ஆராய்கிறது. இவற்றைச் சரியாக நாம் உணராததன் பயனக நம் உடலுக்குத்தீங்கு மட்டுமல்ல, ஒழுக்கச் சீர்கேடும்: ஏற்படுகின்றது இக்குறையை நிவர்த்திக்கும் பொருட்டு மிகச் சிக்கலான, எடுத்துச் சொல்வதற்குக் கடினமான உண்மைகளை எளிய நடையில் இதன் ஆசிரியர் விளக்கி யுள்ளார். இதன்மூலம் அவர் தமிழ் இயக்கத்தில் இப்புது இயலும், இதில் இனி பல ஆராய்ச்சி நூல்களும் தோன்று: வதற்கு அடிகோலி விட்டார். மிகவும் கண்ணியமான முறை: யிலும், சற்றும் ஆபாசமின்றியும் எழுதப்பட்டுள்ளது. இதில் மிகவும் மெச்சுதற்குரிய அம்சம். தமிழ் உலகம் இதற்குச் சிறந்த வரவேற்பு அளிக்கும் என்று நம்புகின்ருேம்.