பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 69 'மனிதனிடத்தில் போலவே, மிருகங்களிடத்திலும் சம்போகம் மூலமாகவே சந்தானவிர்த்தி உண்டாகின்றது என்பதில் சந்தேகமில்லை. ஆனல் பெண் மிருகங்கள் முட்டை சினைப்பையிலிருந்து வெளிப்பட்டு பலப்படக் கூடிய பருவத் திலேயே சம்போகத்தில் ஆசை கொள்கின்றன. அந்தச் சமயத்தில்தான் அவை ஆண் மிருகங்களைத் தம் அருகில் வரச் சம்மதிக்கின்றன. ஆல்ை நம் பெண்களுக்கு முட்டை வெளியாவது மாதவிடாய் கண்ட நாளிலிருந்து 14-வது நாளை ஒட்டியாகும். பெண் மிருகங்களுக்கு உண்டாவது போலவே அவர்கட்கும் அந்தச் சமயத்தில் சம்போக விருப்பம் எழுகின்றது. ஆனல் அந்த ஆசை அந்தச் சமயம் 2, 3, நாட்கள் இருந்துவிட்டுப் பிறகு மாதவிடாய் தோன்றுவதற்கு 2, 3, நாட்களுக்கு முன்னதாக மறுபடியும் வீறுகொண்டு எழுகின்றது. இந்த உண்மையை ஸ்டோப்ஸ் அம்மையாரும், ாவ்லக் எவ்லிஸ் என்னும் காமநூற் பண்டித சிகாமணியும் டாக்டர் கிங் என்னும் பேராசிரியரும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றனர். இன்னுமொரு விஷயம்-பெண்களுக்கு 40, 50, வயது வந்தபின் மாதவிடாய் உண்டாவதில்லை என்பதும், சினைப்பை முட்டைகளை வெளியிடுவதில்லை என்பதும் அதனல் அந்த வயதுக்குப் பின் குழந்தை உற்பத்தி ஆவதில்லை என்பதும் யாவரும் அறிந்த விஷயம். சந்த்ான விருத்திக் காகவே சம்போகம் அமைக்கப்_பட்டிருக்குமானல், சந்தான விருத்தி உண்டாக முடியாத இந்தப் பருவத்தில் சம்போக ஆசை உண்டாகாமல் இருக்கவேண்டும். அல்லவா? ஆனல் யாருக்கும் அப்படி உண்டாகாமல் இருப்பதில்லை. அது மட்டுமன்று : அந்த j அநேக பெண்களுக்கு இந்தப் பருவத்திலேயே முன்னிலும்- அதிகமாகக்கூட எழுவதாக ஸ்டோப்ஸ், கிஷ், புரூம் டெல்லிங் போன்ற ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகிருர்கள். இந்த மாதிரி மாதவிடாய் நின்றபின் சம்போக ஆசை உண்டாவதும் சம்ப்ோகத்தில் முன்னிலும் அதிகமான இன்பம் துய்ப்பதும் மிருகங்களிடைக் காணப்படுவதில்லை. மேலும் இயற்கையானது சம்போகந்தை சந்தான விருத் திக்காகவே அமைத்திருக்குமானல், சந்தான உற்பத்திக்கு அவசியமான சுக்கில உயிரும் சுரோணித உயிரும் சம்போக சமயத்தில் ஏக காலத்தில் வெளியாகி ஒன்று சேர வேண்டு மன்ருே ? சம்போகம் செய்தால் ஆண் பெண் இருவரும்