பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 விர சுதந்திரம் வார்டன் , ஆமாம்பா. வீட்டிலே வளக்கற ஒரு ஆட்டை அறுக்கறத்துக்கே கம்மாலே முடியற தில்லே! நீங்கள் நாளேக்கு தூக்கிலே ஏறும்போது இந்தப் பாழாப்போன கண்ணுலே எப்படிப்பா பார்த்துச் சகிச்சிகிட்டிருப்பேன. ராஜகுரு : சகிக்கிலேன்னு லீவு பேட்டுவிட்டு வீட்டுக் குப் போயிடும். இல்லாவிட்டா நீரும் எங்களோட துக்கிலே ஏறும். கூடவே வாரும்! வார்டன் : லிவு கேட்டா தரமாட்டான், அய்யா ராஜத் துரோகின்னு சந்தேகப்படுவான், துாக்கிலேயும் ஏத்தமாட்டான். ராஜகுரு : ஆமாம். உமக்கு எவ்வளவு சம்பளம்? வார்டன் : மாதம் ஐம்பது. ராஜகுரு : இதுவரைக்கும் எத்தனைப் பேரைத் துரக்கிலே போட்டிருக்கீர்? வார்டன் : என் சர்விசிலே சுமார் நூறு பேர் இருக்கும் தம்பி. ராஜகுரு : அத்தன பேருமே கொலேகாரங்கதான? வார்டன் : இல்லை. பாதிக்குமேலே அரசியல் கைதிகள். ஆன அவங்ககிட்டேயெல்லாம் கான் நெருங்கிப் பழகினதில்லே. எங்கோ தண்டனை விதிப்பாங்க. இங்கே வந்ததும் ரெண்டு நாள்ளெ, தூக்கிலே போட்டுடுவாங்க. ஆல்ை உங்களோட ரொம்ப நாள் நெருங்கிப் பழகிபுட்டேன் தம்பி.