பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வீர சுதந்திரம் கிழற் காட்சி பின்னணி : சட்டத்திற்கு விரோதமாக இரவு நேரத்தில் துரக்கிலே போட்ட உடல்களைப் பெற்றவர்களிடம் கூடத்தரவில்லை. அரசாங்கமே சட்லஜ் நதிக்கரை யில் சுட்டெரித்து ஆற்றில் கரைத்து விடுகிறது! மாவீரன் பகத்சிங்கின் மறக்க முடியாத உயிர்த் தியாகம், இமயமுதல் குமரி வரையுள்ள இந்திய நாட்டை உலுக்கி எழுப்புகிறது! இளைஞர்களின் இலட்சிய தீபமாக விளங்குகிறது, புரட்சி-வீரர் களின் புனிதப் பயணம். அவர்களைப் போலவே உடல், பொருள், ஆவி அனைத்தையும் தாய்காட்டுக்கு அர்ப்பணம் செய்ய ஆயிரமாயிரம் இளைஞர்கள் துடித்தெழுகின்றனர். இப்படி ஆயிரமாயிரம் வீர கட்சத்திரங்கள் இருட்சிறைகளிலும் துரக்குமேடை களிலும் மறைவதைக்கண்டு நாடே மனம்கொதிக் கிறது. இச்சமயத்தில் புயலின்கடுவே அமைதியைப் போல் இந்திய அரசியல் வானத்தில் காந்திமகான் என்ற காலேக் கதிரொளி, தோன்றி விடுதலைப் போர்க்களத்தில் தனது புதிய ஒளியைப் பரப்பு கிறது. (காந்திமகான் என்ற பாடல். பாடலில் வரும் கருத்திற்கேற்ப ஸ்லைடுகள் நிழலில் தெரியட்டும் காந்திமகான் என்ற காலக் கதிரவன் காரிருள் நீங்கிட இங்குவந்தான் சாந்தியுடன் நாடு சக்தியுடன் வாழ சத்திய சோதனை தந்த மகான்