பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வீர சுதந்திரம் மேஜர் : ஒ சொல்லுடா கண்ணு, சொல்லு. சாரண இளைஞன் : எனதரும் மாணவ நண்பர்களே! கம்ம நல்லூர் கிராமத்திலே பிறந்தவர் நம்ம மாமா-டாக் டர் கண்ணன். இப்போ நம்ம இந்திய ராணுவத் திலே பெரிய மேஜர் நம்ம மாம்ா மாதிரி நாமும் பெரிய வீரரா இருக்கனும், டாக்டரா வரணும்-மக் களைக் காப்பாத்தனும் சோல்ஜரா வரணும்-நாட் டைக் காப்பாத்தனும் பட்டாளத்திலே இருந்து பத்து நாள் விடுமுறையில் வந்தார். வந்த இடத் திலேகூட நாம் கூப்பிட்ட உடனே வந்துவிட்டார். ஜெய்ஹிந்த்! வாழ்க இந்தியா' என்று பத்தாயிரம் முறை எழுதின இந்த ஏட்டையும் அவருக்கு அன் பளிப்பாகத் தருகிருேம். இப்போது நம்ம மாமா நமக்கு நம்ம சுதந்திரத்தின் கதையைச் சொல்ல ணும்னு கேட்டுக்கறேன். நன்றி! மேஜர் : பாரத நாட்டின் வருங்காலப் பெரியோர்களே! கான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும். நானும் உங்களைப்போல இந்த மண்ணில-இதே ஊரில், ஒரு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த வன்தான். என் தந்தை இந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த வீரர். காடறிந்த தேச பக்தர்! தியாக சீலர் அவர் கடைசிக் காலத்தில், சுதந்திர நாட்டில், நான் இராணுவப் பணியாற்றி நாட்டைக் காக்க வேண்டும் என்று கட்டளை யிட்டார். அதன்படியே இராணுவத்தில் பணி புரி கிறேன். டாக்டர் பரிட்சையில் முதல்தரமாகத் தேரினேன். தனியாக டாக்டர் வேலை பார்த்திருந் தால் பல லட்சம் சேர்த்திருப்பேன். பெரிய பணக் காரணுகியிருப்பேன். ஆணுல் என் தந்தை சொற்படி