பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 5t வாஞ்சி : அப்ப கோபிக்காம பேசாமே சாதுவாட்டமா இரு ஆமாம் டொன்னம்மா! ஏன் இப்படிப்பரிதாபமா இளேச்சிருக்கே. பாவம்! பொன்னம்மா : மழைகாலத்திலே எறும்பு ஏன் இளச் சிருக்கின்னு யாராவது கேப்பாளோ? வாஞ்சி : மழைகாலத்திலே எறும் புக் கு இரை கிடைக்காது. இளைச்சிருக்கும்!உனக்கென்ன இங்கே குறைச்சல். கல்லா மூணு வேளைக்கு ஆறு வேளையா வயிருரச் சாப்பிடறதுக்கென்ன? அது தா ன் கொட்டி வச்சிருக்கே. - பொன்னம்மா : புத்தியுள்ள பொம்மனுட்டி புருஷாள் சாப்பிடாமே இலை போட்டுச் சாப்பிடமாட்டா. வாஞ்சி : இலை போட்டு சாப்பிடாட்டா பிளேட்லே சாப் பிடு. பெரிய இடத்துப் பெண் மாதிரி. பொன்னம்மா : நாளும் கிழமையுமா இப்படியெல்லாம் பேசாதேள். வாஞ்சி : பின்னே எப்படியெல்லாம் பேசுவாள்? பொன்னம்மா : உங்களுக்கு ஒன்னும் புரியாது புத்தி யுள்ள பொம்மனுட்டி புருஷனுக்குப் பரிமாறிட்டுத் தான் அப்புறம் மீதியிருந்தா சாப்பிடணும். வாஞ்சி : ஒகோ, அப்படியா வேளா வேளைக்கு நான் விட் டு க் கு வர்ரது இல்லேன்னு மறைமுகமாச் சொல்லிக் காட்டுறியா? சரி, நான் ஊர்லே இருந்து வீட்டுக்கு வராமே இருந்தாதானே நீ சாப்பிடமாட்டே! கான் போயிட்டேன்னு வச்சுக்கோ, அபபோ?