பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வீர சுதந்திரம் தான் எழுதிவச்சிருக்கார். எல்லாம் பேசுவான்கள். காளைக்கு ஏதாவது வந்தா ஒரு பயலும் உதவிக்கு வரமாட்டான். வீரன் கீரன்னு-தலைவர்கிலேவர்ன்னு ஆயிரம் மாலையைப் போட்டு, சிதம்பரம் பிள்ளையை யும் சிவாவையும் ஜெயிலுக்கு அனுப்பிய இந்தக் கூட்டம், நாளது வரை க் கு ம் அவர்களோட விடுதலைக்கு என்ன வழி செஞ்சது? அவனவன் ஆறு வேளை சாப்பிட்டு நிம்மதியா இருக்கான். அது மட்டுமில்லே, அவர் கடத்தின கப்பல் கம்பெனியை வித்துப்புட்டதும், அவர் குடும்பம் நடுத்தெருவிலே நிற்கிறதும் தான் மிச்சம்; அந்தக் குடும்பத்து மேலே கேஸ் வேறே போட்டிருக்காங்களாம்; இந்த நன்றி கெட்ட ஜனங்களுக்குச் சுதந்திரம் ஒரு கேடு. இவங் களுக்குத் தியாகம் ஒரு கேடு. தியாகிகளைக் கேலி பண்ற, துரோகிகள் நிறைஞ்ச பாவிகள் வாழற காடுன்னு இது காட் டி க் கொடுக்கிற காட்டு மிராண்டிகள் நிறைந்த நாட்டுக்கு இந்தியா என்று. பெயர். இந்த உண்மையை வெள்ளைக்காரன் ரொம்ப ா ன் ைதெரிஞ்சு வச்சிருக்கான். அதனுலேதான் எல்லாம் அரையும் குறையுமா இருக்கு அவன் துரையா இருக்கான், காடு சிறையா இருக்கு, அவன் ஆண்டான இருக்கான். நாம் அடிமைகளா இருக்கோம். வாஞ்சி : சபாஷ்: பொன்னு! உன்னே ஒன்னுமே தெரி யாத அசடுன்னு கினைச்சேன்: வெறும் அடுப்பங் கரை விறகுன்னு நினைச்சேன்! பொங்கிவர்ர எரிமலை மா தி ரி ன் ைபொழிஞ்சுதள்றே? அருமையான அரசியல் புயலை அப்படி அ ைய சமா அள்ளி வீசறியே என்னைவிட வேகமாப் பேசேற பொன்னு