பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 57 பொன்னம்மா : அடேயப்பா! இதுபோதும் அத்தான்! ஆமா, நீங்க எங்கே போறேள்? எதுக்காக சித்தப்பா உங்களை அடிக்கடி கோபிக்கிரு: அந்த விஷயத்தை எனக்கும் கொஞ்சம் சொல்லப் படாதோ? வாஞ்சி : அதெல்லாம் உனக்குப் புரியாது பொன்னு. பொன்னம்மா : ஆமா, நமக்கு எதுக்கு இந்தப் புரியாத வீண் வேலை எல்லாம்! காட்டைப் பற்றி மறந் துடுங்க வீட்டைப் பத்தி இனியாவது அக்கறை எடுத்துக் கொள்ளுங்க அத்தான். காட்டைக் காப்பாத்த உங்களைப்போல ஆயிரமாயிரம் வீரர்கள் முன் வரு வாங்க. ஆணு என்னைக் காப்பாத்த உங்க ஒருவரால் தானே முடியும் (அழுதல்) வாஞ்சி : கவலைப்படாதே பொன்னு. நீ ஒரு வீரனின் மனைவி. அழுதால் எனக்குக் கோபம் வரும். பொன்னம்மா : இல்லை. அழலை. இதோ பாருங்க இப்படி கான் இப்படிக் கவலைப்படற'நேரத்திலே பக்கத்திலே இருந்து நீங்க ஆறுதல் சொல்லும்போது அழுகை யெல்லாம் ஆனந்தமா மாறிடறது. என் துன்ப மெல்லாம் எங்கோ போயிடறது! அன்போடு நீங்க ஆறுதல் சொல்றதைக் கேட்டா அதுக்காகவே இனி யொரு தடவை அழலாம்போல இருக்கு! வாஞ்சி : சபாஷ் ஆச்சரியம்: பேசத் தெரியாத நீயா இப்படி பேசுறே? பலே! பொன்னு:பலே! பொன்னம்மா : என்னமோ ஒரு சக்தி, என்னைப் பேச வைக்குது. அத்தான், நீங்கள் இல்லாவிட்டால் கம்ம வீடு ஏதோ பயங்கரமான காடுமாதிரி இருக்கு.