பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 59 பெபன்னம்மா : அப்பா. உங்களோடு பேசி ஜெயிக்க முடியுமா என்ன? வாஞ்சி : முடியாதுதான் பொன்னு, முடியாதுதான்! நான் பேசறதைவிட நீ பேசின கோழைகூட வீர யிைடுவான் பொன்னு! ஏன் நீயும் வந்து மேடை யிலே பேசேன். பொன்னம்மா : ஆமா, அது ஒன்னுதான் பாக்கி, இந்த காட்டிலே இனிமே பெண்கள் பேசித்தான் ஆண் பிள்ளைகளுக்குச் சுதந்திர ஆவேசம் வரனும்! நாங்கள்ளாம் பேச ஆரம்பிச்சா வீட்டுக் காரியத்தை யார் செய்யறதாம்? வாஞ்சி : பொன்னு, நான் போயிட்டு சீக்கிரம் வந்துட றேன். - பொன்னம்மா : நீங்க சீக்கிரம்னு சொன்னு அதுக்கு ஒரு வாரம்னு அர்த்தம்! வாஞ்சி : இல்லை. உடனே வந்துடறேன். பொன்னம்மா : உடனேன்னு உங்க பாஷையிலே ஒரு மாதம்னு அர்த்தம்! - வாஞ்சி : இந்தத் தடவை வெகு சீக்கிரம்... பொன்னம்மா : வெகு சீக்கிரம்னு ஒரு வருஷம்னு அர்த் தம்! எல்லாம் கேக்குத் தெரியும். வாஞ்சி : அடாடா இதென்ன பழைய பஞ்சாங்கம் மாதிரி பேசிகிட்டிருக்கே சரின்னு சொல்லு. நான் அவசரமா போகனும்,