பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வீர சுதந்திரம் ராய் : இல்லை; பாரத மக்கள் பலமற்ற ஒரு ஜனத்தொகை; வீரமற்ற ஒரு சமுதாயம்; பேசிக்கொண்டே இருக்கும் ஒரு பொதுக்கூட்டம்; ஒன்றுபடத் தெரியாத ஒரு உதிரிக் கும்பல்; பாறை மேல் உத றிவிட்ட கெல்லிக் காய் மூட்டைகள்; சிதறிய அறிவினர்; செயல் மறந்தவர்; கடவுள் கடவுள் என்று கதறிக் காலங் கடத்துபவர். லாலா : பேசாதே! ராய் : உரக்கப் பேசுவேன். இது பேச்சு சுதந்திரமுள்ள அமெரிக்க நாடு. வாய்ப்பூட்டு விற்கும் அடிமை இந்தியா அல்ல. உங்களுக்கு உணர்ச்சி வரும் வரை பேசுவேன்; மனிதன் கொடுமை செய்தால், மாட்டு மந்தைகூட எதிர்த்துப் பாயும். கிழட்டு ஆடுகூட சாகும்வரை தலை நிமிர்ந்து கிற்கும்; எருமைக.ைட எதிரிகளை எதிர்க்க வரும், ஆனுல் உங்கள் அருமை பாரத மக்கள்... லாலா : வேண்டாம். இது தவருன கருத்து. ராய் : வெள்ளைக்கார ஆசிரியர்கள் உங்களைப்பற்றி இப்படித்தானே வரலாறறில் எழுதி வைத்துள்ளார் கள். லாலா : அ ப் படி எழுதியவர்கள் அறிவற்றவர்கள். சந்தன வனத்தில்கூட சாக்கடை ஆராய்ச்சி செய்யும் பேதைகள்; பொய் எழுதிப் பிழைப்பவர்கள்; அதைப் படித்துவிட்டு இப்படிப் பேசாதே! நீ ஒரு முறை பாரதநாட்டை நேரில் பார்த்தால் இப்படிப் பேச LDssi-L-sfu.j,