பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வெற்றி மேல் வெற்றி பெற...

நம்பிக்கை வைப்பவனும் செயல்படுபவனும் இந்த உறுதியான அறிகுறிகளால் அறிமுகமாகின்றான்;

அறியாமையிலிருந்து விடுபட்டு விருப்பு வெறுப்பு களுக்கு அடிமைப்படாதிருக்கின்றான்;

வெறுப்பிலிருந்து விடுபட்டு, யாரையும் தண்டிப்புதோ குறை கூறுவதோ இல்லை;

ஒரவஞ்சகம் காட்டுவதிலிருந்து விடுபட்டுச் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதில்லை;

தன்னலத்தை நாடுவதிலிருந்து விடுபட்டுத் தனக்காக எதிர்ப்பதில்லை.

ஒருபோதும் பொறுமை இழப்புதில்லை; தூய்மை என்னும் ஆடையை அவன் கழற்றுவதில்லை; அன்பு எனும் தங்குமிடத்திலிருந்து அவன் வெளிச் செல் வதில்லை.

எல்லாம் நிறைந்தவரை அறிந்தவன், அறிவில் முழுமை பெறுகிறான். -

உள்ளம் உரை செயல்-இவற்றில் குற்றம் அற்றவன். எல்லாம் நிறைந்தவரைப் பயிற்சியின் மூலமே அடைய முடிகிறது.

அறிவு ஆல்றலினாலே அவரைக் காண முடிகிறது. பயிற்சி எடுக்கப்பட்ட சரியான முறைகளினாலும் அறிவின் நிறைவாலும் அவரை அறிந்து உணர முடிகிறது.

வேறுபாடுகளான -

நன்மை, தீமை பகை, அன்பு தப்பெண்ணம், தவறு தன்னல விருப்பம், தவிப்பு