பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த..கோவேந்தன் 133

மாந்தர்களின் கருத்துகள் எல்லாம் விரைவாக அடிக்கும் காற்றில் புகைபோல் கொண்டு செல்லப் படுகின்றன.

புனிதத் தன்மையே தனக்கென வைத்துக் கொள் கிறது,

உண்மை பொறுமையுடன் தாங்கிக் கொள்கிறது, தீய வினையில்லாத நெஞ்சங்களில் இற வாநிலை வாழ்கிறது.

நான் உலகு எங்கிலும் தேடினேன், ஆனால் அமைதி அங்கே இல்லை;

நான் கல்வியுடன் பிணைந்தேன், ஆனால் உண்மை புலப்படவில்லை;

மொய்ப்பொளுடன் இடை இடைதொடர்பு கொண்டிருந் தேன், ஆனால் என் நெஞ்சம் ஆகுலத்தால் புண்பட்டது. அப்போது, அமைதி எங்கே உள்ளது? உண்மையின் மறைவிடம் எங்கே உள்ளது?’ எனப் புலம்பி அழுதேன்;

கீழ்ப்படிதலில், பணிவில் அமைதியைக் கண்டேன், நேர்மையைக் கடைப்பிடிப்பதில் உண்மை வெளிப் وتتغسة-تالة

தன்னலத்தை ஒழிக்கும்போது, தற்பெருமை தரும் நோக்காட்டின் முடிவை அடையக் கூடியதாக இருந்தது.

வாழ்க்கைப் பயணத்தில் ஈடுபட்டுள்ள பயணிகனே! நன்றாகத் தாழ்ந்து பணியுங்கள்;

துயர்படுபவர்களும் எவ்வகை ஆதரவு அற்றவர் களுமாகிய நீங்கள் நெடுசாண்கிடையாக விழுங்கள்;

புண்படுத்தப்பட்டு அதனால் துன்புறுகிறவர்களே! நீங்கள் பற்றிக் கொண்டிருப்பதை விட்டுவிடுங்கள்; \ 2 - ص- وهمه