பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 141

ஆகையால், நீங்கள் பற்றிக் கொண்டிருப்பவற்றை விட்டுவிடுங்கள்.

உங்களின் ஆசைகளை ஒழித்துவிடுங்கள்;

அப்போது, ஆசானின் நிறைவு உங்களை நிறைத்து விடும்.

உங்களின் எண்ணங்களை அழித்துவிடுங்கள்.

அப்போது ஆசானின் ஒளி உங்களை ஒளியாலே அணி செய்யும்.

அழியும் தன்மை உள்ளவற்றிற்கும் மறையும் தன்மை யானவற்றிற்கும் பின்னாலே செல்லாதீர்கள்;

அப்போது அழிவற்றவரும் என்றும் நிலைக்க வல்லவரு மாணவரின் உடமையாகுறிர்கள்;

ஆசானுடன் ஒன்றாகி விடுவீர்கள்;

அதனால் அழிவற்ற நிலையில் அவருடனேயே வாழ்வீர்கள்.

ஆசான்.காத்திருக்கிறார், ஆம்! என்றென்னும் காத்திருக்கிறார், பொறுமையே அவரின் திருப்பெயர்; கருணையிலிருந்து அவர் விடுபடுவது இல்லை;

நேர்மை எங்கே நிலைக்கிறதோ அங்கே அவர் வாழ்கிறார்.

அன் பில் மறைந்திருப்பவர் அவரே; அன்பைப் பெறுங்கள், அவரை அங்கே காணலாம். அறிவொளி அவரை மூடியிருக்கிறது; அறிவு ஆற்றலைத் தூய்மையாக்குங்கள், அப்போது அவரை அறிய முடியும்.

உண்மையின் புகழ் அவரைச் சூழ்ந்திருக்கிறது;