பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வெற்றி மேல் வெற்றி பெற...

மேலும், எவன் அங்கு வருகின்றானோ, அவன் அமைதியினால் நிறைவு பெறுகின்றான்.

பெருமை வாய்ந்த வாழ்வின் மெய்ப்பொருளைப் புரிந்து கொள்ளவும்;

அதறகுள் சென்று அதன் நட்பமைதியை அறிந்து கொள்ளவும் கூடியவர் நீங்கள்!

பலவற்றின் பின்னால் ஒன்றைத் தேடுங்கள்,

ஆரவாரங்களுக்குப் பின்னால் உள்ள அமைதியைத் தேடுங்கள்,

தன்னலத்திற்குப் பின்னாலுள்ள உண்மையான தைத் தேடுங்கள்,

புனிதமான அமைதியை ஏற்படுத்துவது எதுவோ அதனைத் தேடுங்கள்,

அவை காலைப் பணிபோல் மறைந்து போகாமல் நிலையாக உள்ளன.

அறிவுடமை நிலைக்கிறது;

அன்பு நிலைக்கிறது;

அருளிரக்கம் நிலைக்கிறது; உண்மை நிலைக்கிறது; அதனால், தன்னலத்தை துறந்திடுங்கள்.

ஏனெனில், தன்னலனும் அதனுடன் உள்ள எல்லாமே அழியக் கூடியவை,

அவை, பொய்ம்மைக்கு உரிமையானவை!

அதனால், உங்கள் கனவுகளிலிருந்து விழித்து எழுங்கள்,