பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் I59

தன் நெஞ்சத்தின் உள்மறைவிடத்தை தேடி,

அவனின் குறிக்கோள்களின் தன்மையைக் கடின மாகவே ஆய்வு செய்கையில்,

ஆசையின் மறைவான ஊற்றுகளைக் கண்டு கொள்வான;

அதோடு, வாழ்க்கை எனும் மரத்தின் அடி வேர்கனை கண்டு வெளிபபடுததுவான்;

அப்போது என்றும் நிலைத்திருக்கும் குறிக்கோளைக் கண்டு கொள்வதால், நல்லது, தீயது, இரண்டையுமே அறிநது கொள்வான் ;

மிக உயர்வானதை காண்பதனால், இனிமேல் அவனுக்கு அழிவில்லை.

அழகான மலர் உருவாகும்போது அதன் வளர்ச்சியைப் பார்க்க முடியாது இருப்பதைப்போல்,

மனிதர்களின் பார்வை படாமல் வளர்ச்சி பெறுவான்.

இருந்தும் மெய்யறிவு முழுமையாகவே வளர்ச்சி அடைவதுபோல், உண்மை எனும் மலர் அதன் முழு அழகையும் வெளிப்படுத்தும்போது,

அதன் அமைதியான வளர்ச்சி பற்றி மனிதர்கள் கூறு வார்கள் -

ேஇந்த மாந்தன் மெய்யறிவாளி, எப்போது இவன் தனது அறிவைப் பெற்றான்?

கற்றுக் கொள்ளாமலே இந்த மாந்தன் எப்படி எழுத்து களை அறிகின்றான்???

கருவில் உள்ள ஒரு குழந்தையைப் போல, நிலத்திலுள்ள ஒரு செடியைப் போல,