பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 59

நீ விழிப்புடன் தேடிக் கொண்டே இருந்ததான்ால் அறிந்து விட்டாய்.

நீ பெற விரும்பியதைப் பெற்று விட்டாய்.

நீ எது வேண்டுமானாலும் கேள், நான் மறுக்க மாட்டேன்.

வழியில் நுழைதல்

மாணவன்: ஆசான்களுக்கு ஆசானே! எனக்குக் கற்பியுங்கள்.

ஆசான் : வினவினால் விடையளிக்கிறேன். நான் பலவற்றைக் கற்றுள்ளேன். ஆனால் இப்போதும் அறிவற்ற நிலையிலே உள்ளேன்;

கல்விச் சாலையில் உள்ள ஏடுகளைக் கற்றேன்; ஆனால் அதன் மூலம் அறிஞன் ஆகவில்லை;

மறை நூல்களையெல்லாம் மனப்பாடம் செய்தேன்; ஆனால் அமைதி என்னிடமிருந்து மறைந்து கொண்டது.

ஆசிரியரே! அறிவு ப்ெறுவதற்கான வழியை எனக்கு அறியச் செய்யுங்கள்;

அமைதியின் வழிக்கு உம் குழந்தையாகிய என்னை அழைத்துச் செல்லுங்கள்.

ஆசான் : மாணவனே! அறிவைத் தெரிந்து, வெறு

வதற்கான வழி, உள்ளத்தைத் தேடுவதன் மூலமே உனக்கு வெளிப்படுகின்றது;

நேர்மையானவர் தம் செயல்களிலே அறிவின் வெகு விதியை நீ அறிந்து கொள்வாய்;