பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது நண்பர்கள் அல்லும் பகலும் என் அருகிலேயே இருக்கச் சொன்னலும் என் உத்தரவை மீற மாட்டார்கள். என் வீட்டில் எந்தத் தாழ்ந்த இடமும் அவர்கள் மனத்தைப் புண்படுத்தாது. அவர்களுக்கு ஆகாரம், ஆடை முதலியன வேண்டாம். கிற்க இடம் கொடுத் தால் போதும். அவர்கள் விரும்புவதெல்லாம் என் அன்பு ஒன்றையே. வெளியே போகும் பொழுதும் அவர்களே அழைத்துப் போகலாம். பேசிக்கொண்டு வரச் சொன்னல் பேசுவர். பேசாமல் இருக்கச் சொன் ல்ை உடனே வாய்மூடி மெளனமாய் இருந்துவிடு வர். போகின்ற காரியத்தைப் பற்றி யோசனை. கேட்டால் கூறுவர். போகின்ற இடங்களைப் பற்றி விசாரித்தால் விடை தருவர். பொழுதுபோக்கக் கதைகள் கூறச் சொன்னல் சொல்லுவர். அவர்கள் அறியாத விஷயம் ஒன்றும் இல்லை. அவர்களில் சிலர் கதை சொல்லுவர் ; சிலர் கவி பாடுவர்; சிலர் சரித்திர இதிகாசங்களை விஸ்தார மாக எனக்கு எடுத்து உரைப்பர் ; சிலர் வீரர்களைப் பற்றிச் சொல்லி என் இரத்தத்தை வேகமாக ஓடச் செய்வர். சிலர் என் முன் நாடகங்களை கடத்துவர். சிலர் அழகான ஒவியங்கள் தீட்டுவர்; சிலர் சங்கீத வெள்ளத்தில் மிதக்க விட்டுவிடுவர். சிலர் தத்துவ ஞானிகள் ; சிலர் விஞ்ஞான நிபுணர்.