பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எனது தோழன் நlம் ஒவ்வொருவரும் சில அல்லது பல கண்பர்களைப் பெற்றிருக்கிருேம் சாதாரணமாக நண்பர்கள் வேறு, நாம் வேறு அல்லவா? நண்பரும் நாமும் வகம், எவ்வித வித்தியாசமும் இல்லை என்று கூற முடியுமோ? உயிருக்குயிரான நண்பர் என்று கூறிக்கொள்ளலாம், ஆனால் அங்கும் பேதம் பிற வாமல் இருந்துவிடாது. காதல் நட்பின் ஒரு வகை; நட்பில் ஒற்றுமை முதிர்ச்சி, பின்னமற்ற ஐக்கியம் தோன்றுமிடம் காதல் என்று கூறுவர். காதலர் ஈருடல் ஒருயிர் என்று கூறி மகிழ்வர். சில சமயங்களில் காதலைப் பற்றிக் கற்பனை கூறும் கவிஞர்கள் காதலிடையே காணும் நட்பு உடம்போடு உயிரிடை யன்ன தன்மையுடையது என்றும் கூறத் துணிந்துவிடுவர். ஆல்ை எனக்கும் என் தோழனுக்குமுள்ள நட்பு ஒன்றே உண்மையில் உடம்புக்கும் உயிர்க்கும் உள்ள நட்பை ஒக்கும் என்று தைரியமாய்க் கூற இயலும் எனக்கு ஒர் உடல் அவனுக்கு வேறு உடல் என்பதில்லை. அது போல் எங்கள் இருவர்க் | || 21