பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது தோழன் நான் உலகில் ஏதேனும் செய்ய நினைத்தால் - 'எனக்கென்று ஏதேனும் ஒரு வேலை நியமிக்கப்பட் டிருக்குமால்ை அதைச் செய்து முடிக்க என் தோழனே எனக்கு ஆதாரம். நானகத் தனியே ஒன்றும் செய்துவிட இயலாது. என் தோழனே இன்றியமையாத சாதனம் என்று சொல்லலாமா? பாருங்கள்: நான் படிக்கவேண்டுமா, உலகில் அவதரித்த பெரியோர் நூல்களை நான் சுவைத்து இன்புற வேண்டுமா, கம்பன் கவி ரசம் பருக வேண் டுமா, எனக்கு ஷேக்ஸ்பியருடைய கவிதைத் தேன் தேவையா, ஷில்லருடைய நாடகத்தைக் கற்க விருப்பமா, காளிதாசனின் சகுந்தலையைக் காண ஆவலுண்டா, மகாத்மா காந்தியின் மணிமொழிகள் தெரிய வேண்டுமா, அப்படியால்ை எனக்கு என் தோழனுடைய கண்களும் மூளையும் அத்யாவசிய 'மாகத் தேவை. என் தோழனின் காதுகளைக் கொண்டுதான் தியாகராஜ கீர்த்தனைகள், தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி முதலியன கேட்க இயலும், என் தோழன் இல்லாவிட்டால், சங்கீத வித்வ சிரோ மணிகள் எனக்கு இருந்தும் இல்லாதவர்களே. கிராமபோனும் ரேடியோவும் வெறும் குழாய்க ளாகவும் பெட்டிகளாகவுமே ஆகிவிடும். குழலி ஆம் யாழினும் இனிமையான குழந்தைகள் குர 25