பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இந்த மூவர் வலிமைதான் நீதி' என்பது பழைய சித்தாந்தம்.வலிமை மிகுந்தவர் என்ன அக்கிரமம் செய்தாலும் நீதியாகும் என்பது இதன் பொருள். இது ஓர் அதர்ம சூத்திரம். இதல்ைதான் உலகத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் அவதிப்படுகிறர்கள். இக்காலத் தில் நாம் நீதிதான் வலிமை என்று சொல்வோம். 4. இது விஷயமாய் ஒரு நாள் யோகிக்கலானேன். இந்த யோசனையில் வெகு நேரம் ஆழ்ந்துவிட்டேன். அப்பொழுது அந்தச் சிந்த ைசமுத்திரத்தின் அடி யில் நான் கண்ட காட்சியை வாசகர்களுக்கும் சொல்ல விரும்புகின்றேன். ஒரு குடும்பத்தில் இரண்டு சகோதரர்கள். இரு வருக்கும் காகம் எடுக்கும்பொழுது தண்ணிர் வேண்டியிருக்கும் அல்லவா ? அதற்காக அவர்க எருடைய தந்தை அவர்கள் இருவர் உபயோகத்திற் காகத் தோட்டத்தில் ஒரு கிணறு வெட்டி வைத் திருந்தார். ஜலம் எடுத்து உபயோகிப்பதற்காக ஒரு வாளியும் கயிறும் போட்டுவைத்திருந்தார். அதோடு அவர் தம் குமாரர்களுக்குக் கிணற்றிலிருந்து 37