பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்குரி சிக்கலானர். இது இயேசு கிறிஸ்துவின் இதோப தேசத்திற்கு முற்றிலும் விரோதமானதல்லவா ? இது கடவுள் பெயரால், இயேசுவின் நாமத்தால், எள்ளளவும் நாணமின்றி இயற்றப்படும் வஞ்சகச் செயல் அல்லவா ? என்று வருந்தினர். இதை எதிர்ப்பதே இறைவன் அடியார்க ளுடைய கடன் என்று தெரிந்துகொண்டார். ஆல்ை, சக்ரவர்த்திகளுக்கும் சக்ரவர்த்தியாய், சர்வவல்லமை யும் பொருந்தியவராயுள்ள போப்பை எதிர்க்கச் சாத்தியப்படுமா? எவ்விதமான தண்டனையும் விதிக் கப் பேரப்பிற்கு அதிகாரமுண்டு. அதைத் தடுக்க வல்லார் யார்? வேறு தண்டனைகள் தராவிடினும் கிறிஸ்தவ சங்கத்தினின்று விலக்கிவிடுவாரே அப் பொழுது மக்களிடை வசிக்கவும் இடம் கிடையாதே! பிறர் உதவி சிறிதும் இல்லாமற் போகும். தம்மைக் கொன்ருலும் கேள்வி கேட்பவர் இருக்கமாட்டாரே! இவை யனைத்தையும் அாதர் நன்கு அறிவார். ஆயி னும் அவர் எதிர்க்கவே தீர்மானித்துவிட்டார். ஆயிரத்து முந்நூற்றுப் பதினேழாம் ஆண்டு, அக்டோபர் மாதம் 81-ஆம் தேதி காலை, வித்தன் பர்க் என்னும் பெரிய நகரத்திலுள்ள கீர்த்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயத்திற்குச் சென்ருர், போப்பின் அக்கிரமமான பாவ மன்னிப்புச் சீட் டுக்கு விரோதமாய் தொண்ணுாற்றைந்து வாதங் 56