பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? எங்கும் விசாரித்தேன். அந்தத் தமிழ்த் தேவதை என் கண்ணுக்குப் புலகைவில்லை. ஒகோ, இது ஒரு மயக்கமோ, பட்டப் பகலில் உஷ்ண மிகுதியால் உணவுண்ட பின் உண்டாகும் நெட்டைக் கனவோ!' என்று சந்தேகித்தேன். இல்லை, இல்லை; எல்லோருமா என்னைப் போல் கனவு கண்டுவிட்டார்கள் ? மறு நாள் காலையில் என் வக்கீல் நண்பர் ஒரு வர் வீட்டிற்குச் சென்றேன். போனதும் அவர் என்னைப் பார்த்து, என்ன நீங்கள் எப்பொழுதும் மாலையில் இங்கு வருவீர்களே ! நேற்று ஏன் வர வில்லை ? விசித்திர இசை அமிழ்தமான விருந்தை இழந்துவிட்டீர்களே! என்று கேட்டார். மாலையில் பாரதியார் வந்திருந்தாராம் ; பாஞ்சாலி சபதம் படித்தாராம் ! ஐயோ என் துர் அதிர்ஷ்டம்! அதன் பின் நான் பாரதியாரைக் கானும் பாக்கியத்தைப் பெறவில்லை. இப்பொழுது அவரு டைய தேசீய கீதங்க'ளின் முகப்பில் காணப்படும் அவருடைய படத்தைக் கண்டே ஆறுதல் அடை கிறேன். இல்லை, இல்லை; அவருடைய ஆன்மா அன்று அவர் விழிகளில் ஜ்வலித்ததுபோல் அவருடைய கவிகளிலும் ஜ்வலிக்கின்றதல்லவா? அந்தக் கவிகளிலும் அவரைப் பார்க்கிறேன். 60