பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு ? யிருக்கின்றனர். ஆனல் அவர்கள் அனைவர்க்கும் கிடைக்கும் ஊதியம் ஒரே அளவுடையதன்று. தினங் தோறும் பதியிைரக்கணக்காய்ப் பணம் பெறுவே ரும் உளர். பத்துக் காசுகூடப் பார்க்க முடியாது பரிதவிப்பவரும் உளர். ஆயினும் இவர்கள் எல்லோ ருடைய வருவாயையும் கூட்டி வகுத்துச் சராசரி வருமானம் காண்பது அர்த்த சாஸ்திர நிபுணர் வழக்கம். அங்ங்னம் ஒவ்வொரு காட்டிலும் தனி மனிதன் ஒருவனுடைய தினசரி சராசரி வருமானம் இதுவென்று கணித்திருக்கிருரர்கள். அதை இந்திய ருடைய அத்தகைய வருமானத்தோடு ஒத்துப் பார்ப்பதே இந்திய வறுமை ஜுரத்தை அளந்தறி யும் கருவிகளில் ஒன்று. மேல் நாடுகளில் இரண்டு ரூபாய்க்குக் குறைந்த தினசரி சராசரி வருமானம் காண முடியாது. கீழ் நாடுகளில் அரை ரூபாய்க் குக் குறைவில்லை. ஆனல் நமது நாட்டிலோ இரண்டணுக்கூடக் கிடைப்பதில்லை. கிடைப்ப தெல்லாம் ஓர் அணு ஏழு பைசாவே. இந்திய தரித் திரத்தின் டிகிரி இதுவே என்று எண்ணிவிடவேண் டாம். இந்திய மகாஜனங்களிலும் ஆயிரக்கணக் கான ரூபாய்கள் தினசரி வருமானமாக உடையோர் இல்லாமலில்லை. அதனல், தினசரி சராசரி வரு மானம் ஒன்றே முக்கால் அணுவிற்கும் குறைவாகு மால்ை, எத்தனை கோடி மக்கள் அதுவும் காணக் கிடையாது தவிப்பவர் என்பது கூருமலே விளங்கு மன்ருே ? 78