பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு ' வதைக் கவனித்தால் ஹண்டர் துரையின் கூற்றின் உண்மை விளங்கும். உயிரைக் காக்கும் உணவிலும் மேலிான மானத்தைக் காக்கும் உடையேனும் உண்டோ ? அதுவுமில்லை. சில வருஷங்கட்கு முன்னர் வடக்கே அலகாபாத் நகரத்தில் டிப்டி கமிஷனராயிருந்த ஹாலோய் துரை எழுதிய கடிதம் ஒன்றில், இந்திய நாட்டில் பலர் கந்தையையே உடுத்திருக்கின்றனர். அதுவுங்கூட மானத்தைக் காப்பதற்கு வேண்டிய அளவில்லை, என்று கூறி வருந்துகிருர் ஆமாம். ஏழை ஆண் மக்கட்குக் கிடைக்கும் உடை கெள பீனம் ஒன்றே. போர்த்திக்கொள்ளப் போர்வை யொன்று கிடைக்கப்பெற்றவன் போன ஜன்மத்தில் புண்ணியம் செய்தவன். ஏழைப் பெண் ஏழெட்டு முழக் கந்தை கிடைக்குமால்ை இகத்தில் பரத்தைக் கண்டவள் ஆவாள். ஐயோ! மானம் காக்கத் துணி யில்லாது மரித்துவிட விரும்பும் பெண்களைப்பற்றிக் கேட்டதில்லையோ? உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை. சரி, இருக்க இடமுண்டோ? அதுவுமில்லை. குருவிக் குக் கூடுண்டு ; புலிக்குக் குகையுண்டு, எலிக்கு வளை யுண்டு; ஆல்ை இந்திய ஏழை இவற்றிலும் இழிச் தவனாகக் காணப்படுகிருன். ஆண்டுதோறும் அரசாங்கத்தார் இந்திய தேசத்தின் நிலைமையைக் குறித்து இந்தியா 80