பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? இந்திய மகாஜனங்களின் வறுமை நோயை நீக்க இனி ஒரு கணமேனும் தாமதித்தலாகாது. நோய் நீக்குவதைக் குறித்து வள்ளுவர், _ நோய்காடி கோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்று முறை வகுத்தார். இந்திய மக்களின் நோய் வறுமை என்று கண்டுகொண்டோம். ஆனல் நோயை அறிந்தவுடனே நோயின் காரணத்தை அறிந்துவிட இயலாது. நோய்கள் இருவகைப்படும். ஒன்று கருவில் ஒட்டியவை; மற்றென்று இடையில் ஏற்பட்டவை. கருவில் ஒட்டிய வியாதியைக் கடிவது கஷ்டம் நம் நாட்டின் நோய் கருவில் ஒட்டியதா ? இடையில் உண்டானதா? நமது நாட்டினர் ஆதி முதலே ஏழைகளா? அல்லது இப்பொழுதுதான் ஏழைகளா? சிலர் இந்தியர் எப்பொழுதுமே ஏழைகள் என்று சொல்லுகின்றனர். ஆனல் அது பொய் என்று சரித்திரம் கூறும். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் இயற்றப்பட்ட தமிழ் நூல் களில் இந்நாட்டின் செல்வச் சிறப்பைப் பற்றிய குறிப்புக்கள் பல காணக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று மட்டும் கூறுவேன் :

  • முழங்குகடல் ஞால முழுதும் வரினும்

வழங்குதல் த.வா. 82