பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு? பசிப்பிணி அகற்றும் பரமேச்வரி யாவாள். இந்த வெள்ளேயர் கூறுவதைத்தானே இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் எழுதிய தமிழ்க் கவியும் கூறுகிருரர்? ஆகையால் நமது வறுமை புராதனமான தன்று. இடையில் விளங்த ஒன்றே. அதனல் அதை நீக்கிவிட இயலும் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. நோயாளி அபாயகரமான நிலை மைக்கு வந்திருப்பினும், நாளுக்கு நாள் அபாயம் அதிகரித்துக்கொண்டிருப்பினும், நோய் நீக்குவதற் குரிய வசதிகள் இல்லாமலில்லை. ஓர் அறிஞர், கணக்கிட முடியாத களஞ்சியத்தின் மத்தியில் மைடாஸ் போல் வறுமையால் வாடி நிற்கிருள் இந்தியா என்று கூறுகிறர் நாட்டின் நிலவளம் நீர்வளம் இரண்டையும் யாரே கணக்கிட வல்லார் ? ஜனங்களோ பெருந் தொகையினர். சோம்பேறி களும் அல்லர். பண்டைய திறமை இன்றும் இருக் கவே செய்கின்றது. அதல்ை முன்போல் செல்வம் பெற்றுச் சிறப்பாயும் சந்தோஷமாயும் வாழ்தல் கூடும். ஆதலால் நாம் செய்யவேண்டியது யாது ? ஜனங்கள் எல்லோருக்கும் வேலை கிடைக்கும்படி செய்யவேண்டும். மற்ற நாகரிக நாடுகளைப்போல் நம் நாட்டிலும் சகல தொழில்களும் வளர்ந்தோங்கச் செய்யவேண்டும். இடைக் காலத்தில் இந்தியா 84