பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. நாகரிகத்திற்கு வழி ஆங்கில காட்டுப் பேரறிஞர்களில் ஒருவராகிய எட்வர்ட் கார்ப்பென்டர் என்பவர் ஒரு புஸ்தகம் எழுதி யிருக்கிருர். நாகரிகமும், அதன் காரணமும், அதற் குரிய சிகிச்சையும் என்பது அதன் பெயர். அது உலகம் முழுதும் கீர்த்திபெற்று நிற்கும் ஒரு பெரும் நூல். புஸ்தகத்தின் பெயரிலிருந்தே, காக ரிகம் ஒரு கொடிய நோய், அதை அகற்றுதல் அவ சரமாகச் செய்யவேண்டிய கடன் என்பது அவர் கருத்து என்று விளங்கும். நம் காட்டிலும் மகாத்மா காந்தியும் நாகரிகத்தை வெறுப்பதாகவே அவ ருடைய சிஷ்யர்கள் பலர் சாதிக்கின்றனர். பிற நாடுகளில் எவ்வாருயினும் சரி, தமிழ் காட் டில் எங்கு நோக்கினும் நாகரிகத்தைப் பற்றிய கண்டனங்கள் எழுவதைக் காணலாம். சிலர் காட் டுக்கு ஏற்பட்டுள்ள தீமைகளுக்கெல்லாம் நாகரிகமே பிரதானமான காரணம் என்று வாதிப்பர். சிலர் நாகரிகம் என்று பொதுவாகக் கூருமல் நவநாக ரிகம் என்றும் மேட்ைடு நாகரிகம் என்றும் குறிப் பிடுவர். சிலர் பண்டை நாகரிகத்தின் சிறப்பு என்று பலவிதமாய்ப் புகழ்வர். 86