பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரிகத்திற்கு வழி மலங் கழித்த பின் ஆறுகளில் குளங்களில் செளசம் செய்யாமல் வேருகப் பாத்திரங்களில் gpงoth எடுத்து வந்து சுத்தம் செய்து கொள்வராம் நமது தாத்தாக்கள். இது யாரால் செய்ய இயலும் ? நதியில் ஜலம் ஓடுகிறது, குளத்தில் எவ்வளவு அதிக ஜலம்! செளசம் செய்த இடத்திலேயே முகம் கழுவுகிருேம், வாய் கொப்பளிக்கிருேம்! இதில் என்ன தவறு ? பழைய நாட்களில் பல் துலக்க உபயோக மானவை மரக் குச்சிகளும், கரிப்பொடியும், கல்நார் பஸ்மமும். ஆலும் வேலும் பல்லுக்குறுதியாய் இருக்கலாம். ஆனல் அவை அழகாகவோ செளக ரியமாகவோ தோன்றவில்லையே. பல்-பிசின், பிரஷ் எவ்வளவு வசதியாய் உள்ளன தினசரி பிரஷ் உபயோகித்தால் என்ன, நாம் அதை என்றேனும் மோந்து பார்க்கிருேமோ ? வாய் காற்றம் போக வில்லையானல் கைக்குட்டையில் சென்ட் போட்டுக் கொள்ளலாமே ! நமது பாட்டிமார் ஸ்நானம் செய்யும் பொழுது முகத்தில் மஞ்சள் பூசுவது வழக்கம். அப்படிச் செய்வதால் அவர்கள் முகம் தங்கம்போல் மின்னும். ஆல்ை மேனுட்டார் மஞ்சள் உபயோகிப்பதில்லையே! பவுடர்தானே பூசுகின்றனர் அதுதானே அழகு அதுதானே நாகரிகம் ! 89