பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

151

ஜேம்ஸ் ஆலன்


கூடாது.” எப்போதும் கற்றுக் குட்டியாகவே இருக்காமல், ஒரு தேர்ச்சியாளனின் போக்கின்படியே தெளிவுடனும், தீரத் தெரிந்து கொண்ட நிலையிலும் அதனைக் கையாளுமளவிற்கு அதில் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்பதைத் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.

தீர்மானமின்மை ஒரு சிதைவுக் கூறாகும். ஒரு நொடித் தடுமாற்றம் வெற்றியின் போக்கையே திருப்பிவிடக் கூடும். தவறிழைத்துவிடக் கூடாதே என அஞ்சி விரைந்து தீர்மானம் செய்ய அஞ்சுபவர்கள், செயற்படும் போது ஏறத்தாழ எப்போதுமே தவறிழைத்து விடுகின்றனர். கருத்திலும், செயலிலும் சுறுசுறுப்புடையோர் தவறிழைக்கும் வாய்ப்புக் குறைவு. மேலும், தீர்மானமின்றிச் செயலிலீடுபட்டுத் தவறிழைப்பதைவிடத் தீர்மானத்துடன் செயலிலீடுபட்டுத் தவறிழைத்தல் சிறப்பேயாகும். ஏனெனின், முன்னதில் பிழைமட்டுமே யுள்ளது, பின்னதில் வலுவின்மையும் சோந்து விடுகின்றது.

மனத்தை விரைவில் திடப்படுத்தித் தீர்மானத்துடன் செயற்பட வேண்டும். ஏற்கனவே திடப்படுத்தப்பட்ட மனத்தைக் கொண்டிருத்தல் அதனினும் நன்று பின்பு தீர்மானம் இயல்புணர்ச்சியாகவும் தானே இயங்கும்.

விரைந்து தீர்மானம் செய்யும் மனத்திலே திண்மை தோன்றுகின்றது. ஒழுக்கத்தின் சிறந்த நெறியிலும் வாழ்வின் சிறந்த வழியின் கண்ணும் இறுதியாகத் தீர்மானம் கொள்ளுதலே உண்மையில் திண்மையாகும்.