பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153

ஜேம்ஸ் ஆலன்


அவை என்றுமே அவனை விட்டொழிவதில்லை என்பதை அவன் காணலாம். பகைவர்கள் அனைவரிடமிருந்தும் அவனைப் பாதுகாக்கும், தீங்குகள் அனைத்திலிருந்தும் அவனை விழிப்பாக விடுவிக்கும். இருள் இடர்ப்பாடுகள் அனைத்தினூடும் அவன் செல்லுகின்ற பாதைக்கு இருளில் ஒளிபரப்பும், துன்பத்தினின்றும் நீங்கி இளைப்பாறுமிடமாகும் உலகின் முரண்பாடுகளினின்றும் விலகும் புகலிடமாகவே அவை அவனுக்கு பயன்படும்.

திண்மையான மனத்தை உண்மையான சீர்மை ஒரு மாட்சிமை பொருந்திய உடையைப் போல் அணி செய்கின்றது. பழிக்கு உடன்படுவானென எதிர்பார்க்கப்படுகின்ற வேளை உருக்குக் கம்பியைப் போன்று நெகிழ்ச்சி அடையாதிருப்பவனும், நன்மையான ஒன்றிற்குத் தன்னைத் தகுதியுடையவனாக்குவதில் எளிதில் வளையும் கோலைப் போன்று அத்துணை ஒசிவான இருப்பவனும், அப் பண்பைக் கொண்டிருத்தலால் பிறரை அமைவுறுத்தி, உயர்த்துகின்ற ஓர் உண்மையான மதிப்பைக் கொண்டிருக்கின்றான்.

விழுப்பமுடைய மனிதனைத் தாழ்வுறுத்தவும், அடிமை கொள்ளவுமியலாது. ஏனெனின், அவன் தன்னைத் தான் தாழ்வுறுத்துவதை, அடிமைப்படுத்துவதை விட்டொழித்து விட்டான். அவனைக் குறைவுபடுத்தும் எந்த முயற்சியையும் அவனின் பார்வையால், ஒரு சொல்லால், அறிவுடைய பொருள் பொதிந்த ஓர் அமைதியால் உடனடியாகத் தகர்த்தெறிந்து விடுகின்றான்.