பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

ஜேம்ஸ் ஆலன்


விளக்கப்பட்டு விட்டன. அவற்றின் கட்டுமானப்பாங்கு, அவற்றின் கலவைப் பொருள்கள், ஒவ்வொன்றும் உருவாக்கப்பட்டுள்ள உலோகப் பொருளின் நால்வகைத் தன்மை, அவை என்ன நிலைமைகள் வகிக்கின்றன, முதலிய அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டு விட்டன. எவ்வாறு கட்டமைக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளாதவன் தற்போது கட்டலாம்; அரைகுறையாகத் தெரிந்து கொண்டிருப்பவன் இன்னும் மிக நிறைவாகத் தெரிந்து கொள்ளலாம். நிறைவாகவே தெரிந்து கொண்டிருப்பவன் ஆக்கத்தில் ஒழுங்கு படுத்துவதிலும், எளிதாக்குவதிலும் இன்பம் காணலாம். நாம் ஒரு கோயிலை எடுத்துக் கொள்வோம்; அதன் தூண்களின் வலிமையை, சுவர்களின் வலுவை, கூரையின் உறுதிப்பாட்டை, அந்த முழுமையில் சிற்பஞ் சார்ந்த அழகையும் நிறையுடைமையையும் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறேதான் வாழ்வின் மேன்மைக்குப் உயர்வுக்கும் வெற்றிக் குரிய எட்டு வழிகளாகும்.

நாம் சுருக்கமாகத் தொகுத்து வெற்றிக்குரிய எட்டு வழிகளையும் அவற்றின் வலிமையுடனும், ஒளியுடனும் மறுமுறையும் காண்போம்.

1) ஆற்றல் – ஒருவன் தன் கடமையை நிறைவேற்றும் பொருட்டு விடாமுயற்சியுடையதும், இடைவிடாததுமான கடுவுழைப்பை மேற்கொள்ளத் தன் உணர்ச்சியைத் துண்டிக் கொள்வது.