பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 18


அவ்வாறு உதறப்பட்டு விடுவதில்லை. ஏனெனின், அவன் உயிருள்ள மனிதன், செங்கல்லன்று; அவன் வாழமுடியும், கற்றுக் கொள்ள முடியும், இரங்கிச் சீர்திருந்த முடியும், இழந்ததைப் பெற்றுக் கொள்ள முடியும்.

வெற்றியைத் தருவதும், உயிரோட்டமும், ஆக்கம் அனைத்திற்கும் வலிமையூட்டும் கருப்பொருளும் ஒழுக்க ஆற்றலேயாகும்; ஆனால், வெற்றியில் பல்வேறு நிலைகள் உள்ளன. எனவே, பேரளவானதும் நீடு நிலைப்பதுமான வெற்றியை அடையும் பொருட்டு மனிதன் ஒவ்வொரு திசையில் தோல்வியுற்று விடுதல் அடிக்கடி இழிவானதாகி விடுகின்றது. ஆனால் இந் நூலில் விளக்கப்படுகின்ற பொருள், ஓர் அறிவனோ, ஓர் ஆன்மீக மேதையோ பெறுகின்ற வெற்றியைப் பொறுத்ததன்று; ஆனால், சாதாரண ஆண், பெண்ணுடைய சேமம், நல்வாழ்வு, மகிழ்ச்சி ஆகியவற்றில் அக்கறை கொள்ளும் வெற்றியைப் பொறுத்ததே யாகும்; ஒரே சொல்லில் கூறுவதென்றால் மனித இனத்திரளின் ஆக்கத்தைப் பொறுத்ததாகும்; அதாவது, முன்னிலைப்படுவதாலும், இம்மைக்குரியதாயிருப்பதாலும் அது ஏறத்தாழ செல்வத்தைப் பொறுத்ததாயிருப்பினும் அதனிடத்தே அடைப்பட்டுவிடாமல், மனிதச் செயல்கள் அனைத்தையும், குறிப்பாக மகிழ்ச்சி என்றழைக்கப்படுகின்ற மனநிறைவையும் ஆக்கம் என்றழைக்கப்படுகின்ற ஆறுதலையும் உண்டு பண்ணுகின்ற சூழ்நிலைகளுடன் தனி மனிதன் கொண்டிருக்கின்ற