பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 20



ஆற்றல்

வெற்றி அனைத்துக்கும் பொருள் இயக்கு நிலையே, ஆற்றலாகும். உயிர்பற்ற நிலக்கரியை அது நெருப்பாக மாற்றிவிடுகிறது; நீரை ஆவியாக மாற்றுகின்றது; மிக எளிய திறமை நுண்திறமையாக வளருவதுவரை அதற்கு உயிரூட்டிப் பலப்படுத்துகிறது; அது அறியாமை மனத்தைத் தொடுகின்ற வேளையில் முன்பு இயங்காத் தன்மையில் உறங்கிக் கொண்டிருந்த ஒன்றை உயிர்ப்புள்ள ஒரு நெருப்பாக மாற்றிவிடுகின்றது.

ஆற்றல் ஓர் ஒழுக்க அறம்; சோம்பல் அதன் எதிர்மறையான மறம். அறம் என்ற நிலையில் ஆற்றல் பண்படுத்த வேண்டியதாகும்; முயற்சியுடனிருக்கத் தன்னைத் தானே எழுச்சியூட்டிக் கொள்வதின் மூலம் சோம்பேறியான மனிதனும் சுறுசுறுப்புள்ளவனாக மாறிவிடலாம். சுறுசுறுப்புடைய மனிதேனாடு ஒப்பிடுகையில் சோம்பேறியானவனை அதில் பாதியளவு கூட உயிருள்ளவனாகக் கொள்ள முடியாது. சோம்பேறி மனிதன் உறக்கத்திலிருந்து தன்னைத் தான் தட்டியெழுப்பு முன்னரே சுறுசுறுப்புடைய மனிதன் குறிப்பிடத்தக்க அளவு வேலையைச் செய்து முடித்துவிடுகின்றான்; சோம்பேறி மனிதன் ஒரு வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கையில், சுறுசுறுப்புள்ளவன் வலியச் சென்று ஐந்தாறு